Header Ads



பொதுநலவாய மாநாடு தொடர்பாக, இன்னொரு பக்கத்தை பார்க்க..!

(பொதுநலவாய மாநாடு தொடர்பாக லங்கா பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம் - ஜெஸீர்) பொதுநலவாய மாநாடு தொடர்பான இன்னொரு பக்கத்தை இக்கட்டுரை விளக்குகிறது. ஒரு மாற்றுப் பார்வை என்ற ரீதியில் இதனை அனைவரும் வாசிப்பது பொருத்தமானது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடுதொடர்பாக அரசாங்கம் தம்பட்டம் அடிக்கத்தொடங்கியுள்ளது. இந்தமாநாடு மூலம் வெளிநாட்டு உதவிகள் குவியும் என அமைச்சர்கள் பாடத்தொடங்கியுள்ளனர். தொலைக்காட்சி முதல்பெருந்தெருக்க்கள்  வரை இன்று இந்த சோகம் (CHOGM)  கதையே ஓடுகிறது. சுற்றாத காற்றாடிகள் காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்குதேவதைக்  கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலக கடவுளின் ஆசிர்வாத்த்தின் ஆச்சர்யம் ஊற்றெடுக்கும் மாநாடு என நாட்டு மக்களுக்கு சொல்லப்படுகிறது.

எனினும் இதற்கு முன்னர் நடந்த மாநாடுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பார்க்கும்போது இந்த கோஷங்களின் உண்மையை புரிந்து கொள்வது கடினமல்ல. 1867 – 1948 வரையான காலப்பகுதியில் பிரித்தானிய காலனித்துவத்தின் அடிமைகளாக இருந்து சுதந்திரம்பெற்ற நாடுகள் ஐந்து ஒன்றுசேர்ந்து இந்த அமைப்பை தோற்றுவித்தன. அது வௌளை மனிதர்களின் சங்கம் என  அழைக்கப்பட்டது. கனடா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, தென் ஆபிரிக்க என்பன இந்த  அமைப்பின் ஆரம்ப அங்கத்தவர்களாவர்.  பிரித்தானியாவின் காலனியத்துக்குட்பட்டிருந்த நாடுகளில்  அடிமைத்துவத்துக்கு எதிராக கிழம்பிய எதிர்பனி காரணமாக அவை அரை சுதந்திர நிலைமையை வழங்க பிரித்தானியா நிர்ப்பந்திக்கப்பட்டது. நேரடியான அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இந்நாடுகள் தொடர்ந்தம் பிரித்தானியாவின் புகழ்பாடும் நாடுகளாக இயங்கின. அல்லது கிரீடத்துக்கு விசுவாசமானவர்களாக நடந்துகொள்ளுவதை பிரித்தானியா கவனித்துக்கொண்டது. 

1962 இல் பெல்போ பிரகடனத்தின் படி காலனியத்துக்குட்பட்டிருந்த நாடுகள் டொமினியன் நாடுகளாக மாறியபோதும் அவை தொர்ந்து; பிரித்தானியா சாம்ராஜ்யத்தின் புகழை பாதுகாக்கவூம் பரப்பவூம் பிரித்தானியாகவிற்கு தேவையிருந்தது.  1949 இல் லண்டன் பிரகடனம் வெளியானது. ஆதன் மூலம் பொதுநலவாயத்தின் தலைவியை பிரகடனப்படுத்தி பிரித்தானிய கிரீடம் அதன் அடையாளமானது. எனினும் பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் தன்மையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அது வலுவ+ட்டப்பட்டது.  அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் தலைமைத்துவத்தக்கு ஆதரவூ தெரிவிக்கும் நாடுகளுக்கு உறுப்புரிமை வழங்கும் சர்வதேச அமைப்பாக அது நோக்கப்படலானது.

இந்த அமைப்பில் காணப்படும் 54 நாடுகளில் 33 குடியரசுகளாகும் அதேவேளை எஞ்சிய 21 மன்னராட்சி நிலவூம் நாடுகளாகும். அவற்றில் 16 நாடுகள் பிரித்தானியா இளவரசியை தமது நாட்டின் தலைவராக கொள்கின்றனர். 05 நாடுகளுக்கு அவர்களது மன்னர்கள் உள்ளனர். புரூணைஇ தாருஸ்ஸலாம்இ லெசதோ, மலேசியா, ஸ்வாசிலாந்து மற்றும் தன்சானியா என்பனவையே அவையாகும்.  பிரித்தானியாவிற்கு வெளியே இந்த அமைப்பின் மாநாடு முதன் முதலாக 1971 ஜனவரி 14 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. அதன் தலைவராக சிங்கப்பூரின் லீ க்வான் யூ செயற்பாட்டார். ஆதனைத் தொடர்ந்து 22 மாநாடுகள் 22 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. மாநாடு நடைபெறும் நாடுகளின் தலைவர்களே அமைப்பின் தலைவராக அடுத்த மாநாடு வரை செயற்படுவார். 2011 ஒக்டோபர் 28 30 ஆகிய திகதிகளில் அவூஸ்ரேலியாவில் பேர்த் இல் இடம்பெற்ற மாநாட்டிலேயே இலங்கையில் அடுத்த மாநாடு நடத்துவதாகவூம் அதன் தலைமைத்துவத்தை இலங்கைக்கு வழங்குவதாகவூம் தீர்மானிக்கப்பட்டது. 

ஏனைய சர்வதேச மாநாடுகளில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே தலைதைதுவத்துக்கு பிரேரிக்கப்பட்டவரின் பிரதான பணியாகும். பொதுநலவாய மாநாட்டின் தலைமைத்துவத்துக்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களில் பொது நலவாயத்தின் தலைமைத்துவம் பிரத்தானியாவிற்கே உரியது என்பதை எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பிரதானமானதாகும். எந்த நாடு மாநாடு நடத்தினாலும் அதன் தலைமைத்துவம் பிரித்தானியாவிற்கே உரியது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயமாகும்.

இதுவரை மாநாடு நடத்திய அனைத்த நாடுகளும் உண்மையில் மாநாட்டுக்கான கேடரின் சேர்விஸ் வழங்கும் நாடாக மட்டுமே அந்தஸ்து பெறுகின்றன. இந்த கேடரின் சேர்விஸ்ஸையே அமைச்சர்களும் அரசாங்கங்களும் நாட்டின் கௌவரவத்தை உலகத்துக்கு தெரியப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வாக குறிப்பிடுகின்றனர்.  இது வரை மாநாடு நடத்திய எந்த நாட்டினதும் பொருளாதார வளரச்சியில் இம்மாநாடு செல்வாக்குச் செலுத்தவில்லை. பிரித்தானியாவின் சனத்தொகையில் 10 விதமானோர் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களாவர். 2013 க்கேற்ப பிரித்தானியாவின் வருமானம் 930 மில்லியன் டொலர்களாகும். நாட்டின் செலவூ 1.1 டிரிலியன் டொலராகும். வரவூ செலவூ இடைவெளி 108 மில்லியன் பவூன்களாகும். இது தெறிக உள்நாட்டு உற்பத்தியின் 6 வீதமாகும். இந்த நிலையை பொருளியலாளர்கள் கடன் மலை என வர்ணிக்கின்றனர். 

2013/14 வரவூ செலவூத் திட்டத்தில் அரச குடும்பத்தை பராமரிப்பதற்காக 36.1 மில்லியன் பவூன்கள் ஒதுக்கப்பட்டள்ளன. (747 கோடி ரூபாயாகும்). 2010 கணக்கெடுப்பின் படி மகாராணியின் சொ;துக்களின் மொத்தப் பெறுமதி 450 மில்லியன் டொலர்களாகும். (5850 கோடி ரூபாய்). அரசகுடும்ப பிள்ளையின் அணையாடையைக் கூட பொது மக்களின் வரிப்பணத்திலேயே கழுவூகின்றனர். 63181775 பேர் இருக்கும் பிரித்தானியாவின் தலைவிதி இதவேயாகும்.

2014 வருடத்துக்கான இலங்கை ஜனாதிபதியின் மொத்த செலவூ 857 கோடியாகும். கோடாபய, பெசில், சமல் உட்பட குடும்ப கொம்பனிக்காக 72402 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வரவூ செலவூத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டதில் அது 47 வீதமாகும். ஏனைய அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை 81823 கோடி ரூபாயாகும். இரண்டு கோடி எழுபத்தி நான்காயிரத்து நூற்று எழுபத்து ஒன்பது பேர் இருக்கும் இலங்கையின் தலைவிதி இதுவாகும். இங்கிலாந்தின் அரச குடும்பத்தை பராமரிக்க 747 கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. இலங்கையின் மகாராஜாவின் குடும்பத்தைப் பராமரிக்க 857 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஓவ்வொரு தனிநபரினதும் தலைமேல் மூன்று இலட்சம் ரூபாய்களுக்கு மேல் கடனை சுமந்துகொண்டிருக்குமு; நாடு ஒன்று வழங்க வேண்டிய உபசரிப்பு இதுவல்ல.  இளவரசர் சால்ஸின் கரங்களைத் தொட்டு முகர வீணீர் வடித்துக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கு வரலாறு நினைவிலில்லை. இந்நாடு 1796 இல் பிரித்தானியாவின் அதிகாரத்துக்குள் விழுந்தது. கொழும்பில் ஆரம்பித்த இந்த ஆக்கிரமிப்பு 1815 மார்ச் 10 ஆம் திகதி கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்கும் வரை போராட்டம் தொடர்ந்தது. அதிலிருந்து இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற நாட்டுப்பற்றாளர்கள் போராடினர். இந்த போராட்டத்தை முறியடிக்க அப்போதைய பிரித்தானியாவை ஆட்சி செய்த ஐந்தாவது ஜேர்ஜ் மன்னர் ஆயூதக் குழுக்களை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். இலங்கைக்கு வருகை தரும் இளவரசர் சார்ல்ஸின் தற்போதைய ராணியான எலிசபத் இந்த ஐந்தாவது ஜேர்ஜ்ஜின் வாரிசாவார். 

பிரித்தானியாவிற்கு எதிரான போராட்டம் 1818 இல் வெல்லஸ்ஸவில் ஆரம்பமானது. ஜனரல் ரொபர்ட் பிரவூன் வெல்லஸ்ஸவிற்கு தீமூட்டி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தான். 1818 ஒக்டோபர் 28 ஆம் திகதி பிலிமத்தலாவ மற்றும் கெப்பிடிபொல உட்பட போராளிகள் ‘ஓ’ நெல் லின் படையால் கைது செய்யப்பட்ட 1818 நொவம்பர் 25 ஆம்திகதி கொல்லப்பட்டனர். 

அந்த நொவம்பர் இருண்ட வரலாற்றின் 195 ஆண்டுகளுக்கு பின்னர் இளவரசர்களுக்கு உணவூபரிமாறுதல் எனும் வரலாறு கொண்டாடப்படுகிறது.  பிரித்தானியாவின் ஆட்சியை எதிர்த்த இஹகம ரதனபால தேரர் கைது செய்யப்பட்டு யூத்த நீதிமன்றம் மரணதண்டனையை 1818.11.17 அன்று நிறைவேற்றியது. 1818 ஒக்டோபர் 30 ஆம்திகதி கண்டியில் கைது செய்யப்பட்ட பூட்டேவே ரடே ராள யூத்த நீதிமன்றினால் தலைதுண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளானார். விடுதலைப் போருக்கு உரமூட்டிய ஊவ பிரதேச தபகொல்ல உன்னான்சே எனும் அஸ்கிரிய பீட பிக்கு கைது செய்யப்பட்டு 1818.11.14 மரணதண்டனைக்குள்ளானார்.  இவை இடம்பெற்று 195 வருடங்களின் பின்னர் கொலையாளிகளின் கையை முத்தமிட துடிக்கும் அவர்களுக்கு விருந்துவைபவம் நடத்தும் நாட்டுப்பற்றாளர்கள் யார்? இவர்களை செங்கம்பள வரவேற்பளிப்பது தாய்நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு செய்யூம் அவமானமில்லையா?

பொதுநலவாய நாடுகளின் கீழ் உள்ள குடியேற்றவாதிகளின் நினைவூதூபி கொமிசன் மூலம் உலகம் பூராவூம் 2500 நினைவூத் தூபிகள் பராமரிக்கப்படுகின்றன. இது முதலாம் இரண்டாம் உலக மகா யூத்தங்களில் உயிர்நீத்த மற்றும் காலனித்துவத்தை பாதுகாக்க போரிட்ட பிரித்தானிய இராணுவ வீரர்களை கொண்டாடுகவதற்காக நிர்மாணிக்கப்பட்டவையாகும். இலங்கையிலும் இம்மாநாட்டில் இது கொண்டாடப்படும். எனினும் இதனைக் கொண்டாட பூடேவே ரடே ராள, கெப்பிடிபொல,  பூரன் அப்பு, கொங்காலேகொட பண்டா, இஹகம ரதனபால, வாரியபொல சுமங்கல தேரர் யாரும் இல்லை. நிறைவேற்று அதிகாரமிக்க பர்சி மகேந்திர ராஜபக்சவின் யூத்தில் இம்மாநாடு நாடைபெறுவதும் அதன் தலைமைத்துவம் அவருக்கு வளங்கப்படுவதும் ஆச்சர்யப்பட வேண்டிய விடயமல்ல.

“உத்தமரே, புரட்சியை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன். அதிகாரம் பிரபுக்கள் சிலர் மூலம் கிடைத்த தகவல்களின் அடிக்கடையில் தலைமைத்துவம் வழங்கும் தேரர் உட்பட நிளமேக்களை கைது செய்கிறேன். உளவூத் தகவல்களைத் தந்த பிரபுக்களுக்கு பாதுகாப்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் பாதுகாப்பு வழங்குகிறேன். பிரபு ஒரவரின் மூலம் உளவூத் தகவல்களை பெற்றுக்கொண்டேன். அவர் புரட்சிக்காக முன்னின்ற எமது உளவாளியாவார்.” ஜோன் டொய்லி (1812-1822) என்றவரின் இலங்கை தொடர்பான குறிப்பு பிரித்தானியாவின் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த உளவாளி யாராக இருக்க முடியூம்? 1818 வெல்லஸ்ஸ கலவரத்துக்கு உதவசெய்வதாக காட்டி பிரித்தானியர்களுக்கு தகவல்களை வழங்கிய தளபதி வேறுயாருமில்லை. அவர் வனிக சிந்தாமணி மொஹொட்டி தேன் ஹேன்திக் ராஜபக்சயாவர். இந்த வனிக சிந்தாமணி மொஹொட்டி தேன் ஹென்திரிக் ராஜபக்ச தொர்பாக கலாநிதி அலுத்வெவ சோரத தேரர் மெதமுலன மஹருக எனும் பத்திரிகை இணைப்பில் கீழ்வருமாறு குறிபிட்டுள்ளார்.

“வரலாற்று மூலாதாரங்களின் படி ராஜபக்சேக்கள் ஏதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக 1818 கலவர காலகட்;டத்தோடு தொடர்புபடுகின்றனர். இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க போராட்டத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கிய தேசிய வீரர்களிடையே ஒருவர் தான் வனிக சிந்தாமணி மொஹொட்டி ராஜபக்ச. ஆங்கிலேயரால் மிகவூம் குரூரமாக இந்த கலவரம் அடக்கப்பட்டதன் பின்னர் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள மெதமுலனவிற்கு வந்துள்ளனர். அவரே ராஜபக்ச பரம்பரையின் ஆரம்ப மனிதனாக கருதப்படுகிறார்.”

தேரரின் குறிப்பு பிரவூனின் குறிப்பு ஆகியவற்றுக்கேற்ப இந்த வனிக சிந்தாமனி மொஹொட்டி வெல்லஸ்ஸ கலவரம் பற்றி எரிந்த போத பிரித்தானியாவிற்கு உளவுபார்த்து தகவல்களை வழங்கிய பிரபாகும். வேல்லஸ்ஸ கலவரம் மூண்டிருந்த போது மெதமுலனயில் பிரபு மாட்டுப் பட்டி ஏன் எற்படுத்தினார் என்பத தௌpவானது. ஏகாதிபத்திய விசுவாசம் பரம்பரை பரம்பரையாக தொடர்வது இந்த வரலாற்றுப்பின்னணியிலாகும். பர்சி மஹேன்திர ராஜபக்சக்கு இந்த பெயர் பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சேம் விஜேசிங்கவின் பரிந்துரையினாலாகும். தமது புதல்வருக்கு சிறந்த பெயரை பரிந்துரைக்கும் படி டி.ஏ.ராஜபக்ச சேம் விஜேசிங்கவிடம் வினவியபோது நேரு அவர்களின் புத்தமான இந்தியாவை கண்டுபிடித்தல் என்ற நூலில் குறிப்பிடப்படும் “மஹேன்திர” என்ற பெயரை பரிந்துரைத்துள்ளார். இந்த பெயருக்கு முன்னால் பர்ஸி என்ற ஐரோப்பிய பெயரையூம் இணைத்துக்கொள்வது சிறந்தது என்று டி.ஏ. ராஜபக்ச குறிப்பிட்டார். அதற்கேற்ப பர்சி மஹேந்திர ராஜபக்ச என்ற பெயர் உருவானது. இன்றைய தேசப்பற்றாளர் மஹிந்தவின் வரலாறு அவ்வாறானது.

சுந்திர போராட்டத்தின் தளபதிகளை படுகொலை செய்த இங்கிலாந்து பரம்பரையின் தோன்றலான சார்ல்ஸினது கைகளை முத்தமிட்டு வரவேற்கவூம் கிரீடத்தின் ஏகாதிபத்தியத்திற்கு தலைவணங்கியூம் தலைவர் பதிவிக் கதிரையில் அமர்வதற்கு ராஜபக்சவிற்கு எல்லா தகுதிகளும் உண்டு. வெள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த இரத்தங்களின் மீது கம்பளம் விரித்து அந்த அட்டூளியங்களை செய்தவர்களின் கரங்களை முத்தமிட்டு அவர்களை கட்டியணைத்து வரவேற்பது வியர்வை சிந்தி உழைத்த மக்களின் மூலம் நிரப்பி வைத்திருக்கும் மக்களின் பணம் 1940 மில்லியன் ரூபாய்கள் செலவிட்டு இந்த கொண்டாட்டத்தை நடத்துவதும் அந்த விசுவாசத்தினாலாகும்.

ஏகாதிபத்திய விசுவாசிகளுக்கு தேசப்பற்றாளர்களாக முடியூமா? தேசப்பற்றாளர்கள் இவ்வாறு மக்களின் வரிப்பணத்தை, தண்டப் பணத்தை, வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும் கடனை இவ்வாறு நினைத்தவாறு செலவிட முடியூமா? இவற்றை சிந்திக்காத ஆராயாத, எமது நாட்டின் மக்களுக்கு நாளை இந்த கொண்டாட்டத்தின் கட்டணப்பட்டியலை பொருட்களின் விலையாக, மின்சாரத்தின் விலையாக, தண்ணீர் கட்டனமாக, பஸ் கட்டணமாக, தண்டப்பணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

No comments

Powered by Blogger.