Header Ads



பொதுநலவாய இளைஞர் பேரவையில் முஸ்லிம் இளைஞர்களின் உரைகள்

இம்முறை இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டின் இளைஞர் பேரவையின் ஒன்றியம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமானது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இரண்டு முஸ்லிம் இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்களான நிந்தவூரைச் சேர்ந்த  ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் S.L.M ஷாபி, மற்றும் அக்கரைபற்றை  சேர்ந்த  புத்தாக்க ஆராய்ச்சி நெறியாள்கை மற்றும் திறன்கள் அமைச்சர் MI அன்வர் சதாத் ஆகியோர்கள் நேற்றைய தினம் (11.11.2013) பொதுநலவாய மாநாட்டின் தலைப்புக்களில் விஷேட    உரைகளை நிகழ்த்தினர். இதில் அமைச்சர் அன்வர் சதாத் "பாலியல் இனபெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள்" (Sexual Reproductive Health and Rights)  எனும் தலைப்பிலும் , சுலைமான் ஷாபி அவர்கள் 2015 க்கு பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள இளைஞர்கள் (Youth in Post 2015 Agenda)   எனும் தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்  

இதனைத் தொடர்ந்து இளைஞர்களின் எதிர்கால திட்டங்கள், மற்றும் தேவைகள்  பற்றி அமைச்சர்களான  S.L.M. ஷாபி, அன்வர் சதாத் மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள்  இளைஞர்  பாராளுமன்ற உறுப்பினர் SM இஸ்மத் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.  நாமல் ராஜபக்ச அவர்களின் நேரடிக் கவனதிற்கு கொண்டு வந்ததாக இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை இந்த பொதுநலவாய இளைஞர் மாநாடு எதிர்வரும் 14ம் திகதி நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.




No comments

Powered by Blogger.