அகில இலங்கை சொனகர் சங்க ஏற்பாட்டில் பதுளை அல் அதான் வித்தியாலயத்திற்கு கணனிகள் அன்பளிப்பு
அகில இலங்கை சொனகர் சங்கம் பதுளை அல் அதான் மகா வித்தியாலயத்தின் மிக நாள் குறைப்பாடாக இருந்து வந்த கணனி ஆய்வுக் கூடத்திற்கான கணனிகள் இல்லாமை பிரச்சினைக்கு தீர்வாக மேற்படி சங்கம் 10 நவீன கணனிகளை அன்பளிப்பு செய்துள்ளது. பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு வித்தியாலய அதிபர் ஜனாபா இனாயா தலைமையில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை சொனகர் சங்கத்தின் தலைவர் வைத்திய பஸ்லி நிஸார் மற்றும் அதன் செயலாளர் ரிஸ்கி சலீம் ஆகியோர் கலந்து கொண்டு கணனி ஆய்வு கூடத்திற்கு அன்பளிப்பு செய்தனர். இதன் போது பதுளை அல் அதான் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பதுளை மாவட்ட சொனகர் சங்கத்தின் உறுப்பினர்களும் பங்கு கொண்டனர். நிகழ்வில் வைத்திய அப்பாம் அல் ஹாஜ் முபாரக் ஆகியோர் உரையாற்றுவதையும், கணனி ஆய்வு கூடத்தில் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பஸ்லி நிஸார் திறந்து வைப்பதையும் படங்களில் காணலாம்.




Post a Comment