Header Ads



வீதிகளைக்கூட ´செம்போ´ போட்டு கழுவுகிறார்கள் - ரணில் விக்ரமசிங்க

(Adt) பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு வீதிகளைக்கூட ´செம்போ´ போட்டு கழுவுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த ராஜபக்ஷ தலைமையை கழுவி நல்ல பாடம் ஒன்று புகட்ட வேண்டும் என கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். 

நாட்டில் கல்வித்துறைக்கு பணம் இல்லை, பொது மக்கள் உடல் நலக்குறைவுக்கு மருந்து எடுக்க பணம் இல்லை, ஆனால் 2014ம் நிதியாண்டுக்கு பொய் வரவு-செலவுத் திட்டம் ஒன்றை சமர்பிக்க அரசாங்கம் முயசித்து வருகிறது. 

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டை இந்த வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு முடியாது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையை வெற்றியடையச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை இயக்கும் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் செயற்குழுவிற்கே உள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. மக்களுக்கு நல்லது செய்ய துடிப்பவனை கேவலமாக பேசுவைங்க இதுதான் உலகம் ஐயா

    ReplyDelete

Powered by Blogger.