Header Ads



இந்த முஸ்லிம் சட்டத்தரணிகளை பாராட்டுவோம்..! இப்படி ஒவ்வொருவரும் முன்வரட்டும்..!!

(எம்.எம்.ஏ ஸமட்)

நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் என்போருக்கு சம்மாந்துறை நீதவான் நீதிபதி அவர்களினால் இம்மாதம் 25ம் திகதி சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தோன்றும்படியாக அழைப்பாணை மற்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் ஸக்கி இஸ்மாயில் மற்றும் எ.எம். நஸீல் ஆகியோர் (11.11.2013)  நிந்தவூர் 7 மற்றும் 8ம் பிரிவுகளில் பொது மக்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பொதுத் தொல்லைகள் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாட்டில் திருப்திகொண்டதன் பேரிலேயே இவர்களுக்கு சம்மாந்துறை நீதவான் நீதிபதி அழைப்பாணையினை பிறப்பிருத்திருக்கிறார். 

இம் முறைப்பாட்டில் நிந்தவூர் 8ம் கிராம சேவகர் பிரிவில், அல்-மஸ்லம் வீதியின் இரு இடங்களில் அப்பிரதேசத்தில் மழைக் காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வழிந்தோடச் செய்யவென வீதியின் குறுக்காக அமைக்க வேண்டிய இரு வடிகான் பாலங்களை அமைப்பதற்கு இதுவரை காலமும் நடவடிக்கை மேற்கொள்ளாது உள்ளனர். இதனால் வெள்ள நீர் அவ்வீதியின் குறுக்காக பரந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் உரிய முறையில் வடிகான்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படாமையினால் மழைக் காலங்களில் வெள்ள நீர் வழிந்தோட ஏதுக்கள் எதுவுமின்றி அப்பிரதேசத்திலேயே தொடர்ந்தும் தேங்கி நிற்கும் நிலை தோன்றியுள்ளது. மழை வெள்ளத்தினால் மக்களின் அன்றாட போக்குவரத்திற்கும் நடமாடுகைக்கும் பாதிப்பினை குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மேற்கொண்டுள்ளதனால் பொது மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.

மேலும், நிந்தவூர் 7ம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள எ.பி.சி. வீதியின் தௌஹீத் ஜும்ஆ பள்ளி வாயலுக்கு அண்மையில், இப்பிரதேசத்தில் மழையின் காரணமாக தேங்கக் கூடிய வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யவென அமைக்க வேண்டிய வீதியின் குறுக்கேயான வடிகான் பாலத்தினை (ஊரடஎநசவ) அமையாது அவ்விடத்தின் வீதியின் குறுக்காக பாரிய குழியினை அகலமாக அகழ்ந்து விட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் குறித்த இடத்தில் அமைக்க வேண்டிய வாய்க்கால் பாலத்தினை (உரடஎநசவ) அமைக்காது இதுவரையில் பாரிய குழியாக விட்டுள்ளதனால் அவ்வீதியின் பொதுப் போக்குவரத்திற்கு தொல்லை ஏற்பட்டுள்ளதுடன்; மக்களின் சுதந்திரமான நடமாடுதலுக்கும், சுகாதாரத்திற்கும் இதனால் பங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.

ஏ.பி.சி குறுக்கு வீதியானது தெற்கே தியேட்டர் வீதியில் இருந்து ஆரம்பித்து வடக்கே எ.பி.சி. வீதியில் சென்று முடிவடைகின்ற சுமார் 300 மீற்றர் நீளம் கொண்ட உள் குறுக்கு வீதியொன்றாகும். இவ்வீதியின் எ.பி.சி. வீதியில் சென்று முடிவடைகின்ற சமார் 50-100 மீற்றர் அளவுக்குட்பட்ட பகுதியானது ஆழமான குன்றும் குழியுமாகவும், போக்குவரத்திற்கு தடையாகவும், மிக நீண்ட நாட்களுக்கு வெள்ள நீர் தேங்கி நிற்குமிடமாகவும் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக காணப்படுகின்றது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின்  நடவடிக்கையின்மையின் காரணமாக இவ்வீதியின் வழியால் பயணிப்பது அப்பிரதேச பொது மக்களுக்கு தொல்லையினை உண்டுபண்ணியுள்ளதுடன், இரவு நேரங்களில் மக்கள் இவ்வீதியினை பாவிப்பதனை அபாயகரமானதாகவும் கருதிவருகின்றனர். மேலும், இவ்வீதியில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் அருகில் வதிந்து வருகின்ற பொது மக்களினதும், குறிப்பாக பாடசாலை செல்லும் சிறுவர்களினதும் பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வீதியின் மருங்கில் பாலர் பாடசலையொன்று இயங்கி வருவதுடன், இவ்வீதியால் சென்றடையக் கூடிய வகையில் ஆரம்ப படாசலை, ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் உப-தபால் அலுவலகம் என்பன காணப்படுகின்றன. பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் இவ்வீதியின் சீரற்ற தன்மை காணரமாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு வேளையில் இறை வணக்கத்திற்காக பள்ளிவாசலுக்கு செல்லும் மக்களும், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக பள்ளி செல்லும் மக்களும் இதனால் தொடர்ச்சியான தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். மேலும், மழைக் காலங்களில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் இவ்வீதியை பாவிக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக இவ்வீதியின் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக நாளாந்தம் வேலைக்கு செல்லும் நபர்களும், பாடசாலை மாணவர்களும் வெள்ள நீர் தேங்கியுள்ள இவ்வீதிகளையும், பிரதேசங்களையும் கடந்து செல்வதெற்கென தூரப் (சுற்றுப்)பாதைகளை மாற்று வழியாக கொள்ள வேண்டியிருப்பதனால் அவர்களின் கருமங்களை நேரத்திற்கு நிறைவேற்றுவதில் தொல்லைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும், மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் வெள்ள நீர் வழிந்தோடுதற்கு உகந்த நடவடிக்ககைகளை குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் இதுவரை காலமும் மேற்கொள்ளாது விட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர். 

நிந்தவூர் பிரதேசத்தின் நிருவாக, நலன் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அதிக அக்கறை கொண்டு தொழிற்பட வேண்டியவர்களும், மக்களின் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்களுமான மேற்குறித்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தமக்குரிய அதிகாரங்களையும் கடமைகளையும் மக்களின் நலன், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் அசாக்கிரதையாக இருந்து வருகின்றனர். இதனால் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற மக்கள் அதிக ஊறுகளை காலாகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர். மக்கள் நலனுக்கும், அவர்களுடைய பாதுகாப்பிற்கம், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையினால் இப்பிரதேச வாழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பலத்த ஊறும் அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது எனவும் அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் அதிகாரி மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் என்போருக்கும் எதிரராக சம்மாந்துறை நீதவான் நீதிபதி அவர்களினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.