யாழ்ப்பாண முஸ்லீம் வட்டார வீதிகள் விரைவாக புனரமைப்பு - மௌலவி சுபியான் (படங்கள்)
(பா.சிகான்)
யாழ் முஸ்லீம் வட்டாரத்தில் உள்ள வீதிகள் தற்போது விரைவாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வேலைத்திட்டம் பொருளாதார அமைச்சினூடாக கிடைக்கப.பெற்ற நிதியினை கொண்டு யாழ் மாநகர சபை கண்காணிப்பினூடாக மேற்கொள்ளப்படுவதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் எம் சுபியான் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டம் ஜின்னா வீதி,அசாத் வீதி,அய்தூஸ் மக்காம் வீதி என்பன புனரமைக்கப்பட்டன. மாநகர சபை இத்திட்டத்தினை நெல்சிப் திட்டத்தின் ஊடாக மேற்கொள்வதுடன்,ஏனைய பகுதிகளான பொம்மைவெளி பிரதேசம் மற்றும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளிட்டவைகளை என்றிப் திட்டத்தின் ஊடாகவும் மேற்கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment