Header Ads



சிரேஷ்ட சட்டத்தரணி அஸீஸ் வக்பு மீளாய்வுச் (நியாய) சபையின் உறுப்பினராகத் தெரிவு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருதைச்சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சி.ஏ.அஸீஸ் வக்பு மீளாய்வுச் (நியாய) சபையின் உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழு இந்நியமனத்தை இவருக்கு வழங்கியுள்ளது.இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆணையாளரான இவர் சாய்ந்தமருது ஜும்ஆப்பெரிய பள்ளிவாயல் பிரதம நம்பிக்கையாளராகவும் செயற்பட்டுவந்துள்ளார். மூன்று பேரைக்கொண்ட இச்சபையின் தலைவராக  முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி யூ.எல்.ஏ.மஜீட் தலைவராகவும்.சிரேஷ்ட சட்டத்தரணி எம்.இல்யாஸ் மற்றய உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

No comments

Powered by Blogger.