Header Ads



கொழும்பிலுள்ள சகல உணவு விற்பனை நிலையங்களிலும் சோதனை

(எம்.எம்.ஏ ஸமட்)

15ஆம் திகதி ஆரம்பமாகும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மகாநாட்டை முன்னிட்டு தலைநகர் கொழும்பிலுள்ள சகல உணவு விற்பனை நிலையங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களமும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து இந்நடவடிக்கையினை முன்னெடுத்து வருகிறது.

இச்சோதனை நடவடிக்கைகளின்போது நட்சத்திர ஹோட்டல்கள், உணவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் உட்பட அனைத்து உணவு விற்பனை நிலையங்களினதும் சுகாதார நிலைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. 

அத்துடன், உணவுப்பொருட்கள் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளனவாக என்பது தொடர்பிலும் உணவு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் இடங்கள் மற்றும் பொதி செய்யப்படும் இடங்கள் போன்ற அனைத்து விடங்களிலும்  சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நகர ஹோட்டல் உட்பட ஏறக்குறைய 10 ஆயிரம் உணவு விற்பனை நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல சுகாதாரக் குறைபாடுகளுடன் காணப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளன.

இச்சோதனை நடவடிக்கையின் போது 4,887 உணவு விற்பனை நிலையங்கள்; திருப்தியளிக்காத நிலையில் காணப்பட்டதாகவும் இவற்றில் 2,859 உணவு விற்பனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2,697 உரிமையாளர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பேச்சாளர் சட்டநடவடிக்கையின் பயனாக 1,258 உணவு விற்பனை நிலையங்களிலிருந்து 7 மில்லியன் ரூபா குற்றப்பணமாகப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.