Header Ads



மனிதர்களுக்கு அழகு சேர்ப்பது சிறிந்த நற்குணங்களே - பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர


(எம்.ஏ.றமீஸ்)

மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒற்றுமையாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். சாதி மத பேதங்கள் எம்மத்தியில் காணப்பட்டாலும் உலகில் வாழும் நாம் அமைவரும் மனிதர்கள் என்ற ஓர் வறையறைக்குள் ஒற்றுமைப்படுத்தப்பட்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

ஒலுவில் சீகாஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மண் மணம் வீசும் மங்கலப் பெருவிழா ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித்தவிசாளரும்இ சீகாஸ் அமைப்பின் தலைவருமான ஏ.எல்.நபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஒலுவில் பிரதேச மாணவர்கள்இ மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் பாரம்;பரிய கலை கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டு திறமை காட்டியவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹாகெதரஇ அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா முகைடீன் உள்ளிட்ட கல்வியியலாளர்கள் கலைஞர்கள் என பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகையில், மனிதர்களை அழகானவர்கள் என்கின்றோம். இவ்வாறு அவர்களுக்கு அழகு சேர்ப்பது அணிகின்ற ஆடைகளிலோ ஆபரணங்களிலோ அல்ல. அவர்களிடமுள்ள சிறந்த நற்குணங்கள் மூலமே அவர்கள் அழகானவர்களாகின்றனர்.

உலகிலுள்ள அனைத்து மதங்களும் நல்ல விடயங்களை மட்டும் செய்யும் படியே போதிக்கினறன. அந்தவகையில் நாம் அனைவரும் நல்ல விடயங்களை செய்ய வேண்டும். எம்மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நாமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது அழகானது. அழகான வாழ்க்கையினை வளமாக்கிக் கொள்ள எல்லோர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். சமயங்கள் வலியுறுத்தும் வகையில் நற்குணங்களோடு நாம் செயற்பட்டால் எம் மனங்களில் மகிழ்ச்சி உண்டாகும்.

மனிதர்களாகிய நாம் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவருடனும் நட்புறவோடு பழக வேண்டும். எம்மத்தியில் உள்ள ஒருவருக்கும் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும். பிறர் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொள்வதும் பிறரது துன்பங்களில் பங்கெடுத்து துயர் நீக்க செயற்படுவதும் மனிதப் பண்புகளாகும். நீண்ட காலமாக பல்வேறுபட்ட அமைதியின்மைக்குள் அகப்பட்டிருந்த எமது நாடு தற்போது அபிவிருத்தியின் பால் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இலங்கை நாட்டில் வாழும் அனைவரும் ஒற்றுமைப்பட்டு வாழ வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர் என்ற நாமத்தின் கீழ் பிரிவினை பாராது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.





No comments

Powered by Blogger.