சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்கு எதிரான நடவடிக்கை - இருவர் பலி, 68 பேர் காயம்
(India MM) சவூதி அரேபியாவில் வங்கதேசம், பிலிப்பைன்ஸ், இந்தியா, நேபாள், பாகிஸ்தான், ஏமன் நாடுகளை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கியியுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்ப செல்லவதற்காக 7 மாத காலம் அவகாசத்தையும் சவூதி அரேபியா வழங்கியுள்ளது.
அது முடிவடைந்ததை அடுத்து சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது நேற்று தேசிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் ரியாத் அருகிலுள்ள மான்புஹா புறநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை அகற்றும்பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் பெரும்பாலும் கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் கலவரத்தில் இறங்கினர். கத்தி மற்றும் கற்களை வீசி சவூதி மற்றும் மற்ற வெளிநாட்டினர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் சவூதிக்காரர். மற்றொருவர் யார் என்பது இன்னும் தெரியவரவில்லை.
மேலும் 28 சவூதி நாட்டினரும், 40 வெளிநாட்டவர்களும் இதில் படுகாயமடைந்தனர். 561 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment