இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்டுத்த தீவிர முனைப்புடன் சில பிரித்தானிய ஊடகங்கள் செயற்படுகின்றன
.jpg)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே செனல்4 ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் நியூயோர்க்கின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்குமாறு செனல்4 ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் கோரியதாகவும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு தாம் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், செனல்4 ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானிய ஊடகங்களில் சில இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்டுத்தும் தீவிர முனைப்புடன் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை செனல்4 ஊடகம் சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். செனல்4 ஆணப்படம் தொடர்பில் விவாதம் நடாத்தத் தயார் எனவும், அது தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு ஊடகவியலாளர் கெலம் மக்ரே தயாரா எனவும் சவேந்திரா சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே பகிரங்க விவாதமொன்றுக்கு விடுத்த சவாலை மக்ரே ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், மீண்டும் அது தொடர்பில் சவால் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment