Header Ads



கொழும்பு - காலி அதிவேக நெடுஞ்சாலை ஜனவரி 26 ஆம் திகதி திறக்கப்படுகிறது

கொழும்பு - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் காலிக்கும் மாத்தறைக்குமிடையிலான பகுதி எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

அதேதினத்தில் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட இருப்பதாக துறைமுகங்கள் நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.

காலி - மாத்தறை இடையிலான 35 கிலோ மீற்றர் தூர அதிவேக நெடுஞ்சாலை பாதை 25 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. நிர்மாணப் பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளன.

கொழும்பு - காலிக்கிடையிலான நெடுஞ்சாலை 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. மூன்று பிரதான நுழைவு வழிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்படும் காலி - மாத்தறைக்கிடையிலான நெடுஞ்சாலை பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த வாரம் பார்வையிட்டார்.

கொழும்பிலிருந்து மாத்தறை வரையான பாதை அமைக்கப்பட்ட பின் கொழும்பிலிருந்து 90 நிமிடங்களில் காலிக்கு பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.