Header Ads



அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏனைய வேலைத்திட்டங்களிலும் ஈடுபடுத்தத் தீர்மானம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

பிரதேச செயலகங்களில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்களுக்காக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவர்களது கடமைகளுக்கு மேலதிகமாக  திட்டமிடல் பிரிவில் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளிலுஈடுபடுத்த த்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீ்ழ் அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் மூன்று பேர் வீதம் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.பிரதேச செயலகங்களில் ஒருங்கிணைப்புக்குழுக்களுக் கூட்டங்கள் பெரும்பாலும் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே இடம்பெறுகின்றன. இதனால் இவர்கள் வேறு கடமைகளின்றி இருப்பதைக் கவனத்திற்கொண்டு இவர்களை அமைச்சின் ஏனைய கடமைகளான திவிநெகும, கமநெகும, டிசிபி, தேசத்திற்கு மகுடம்போன்ற ஏனைய வேலைத்திட்டங்களிலும் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.