கல்முனையில் கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு
(சுலைமான் றாபி)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் திவிநெகும திட்டத்தினூடாக பொருளாதார அமைச்சின் கீழ் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தின் 24 கிராம சேவகர் பிரிவுற்குட்பட்ட 240 குடும்பங்களுக்கு இன்று (13.11.2013) முதற்கட்டமாக தலா 10 கோழிக்குஞ்சுகள் வீதம் 2400 கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் PH பியசேன, கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் திரு. K லவனாதன், கால்நடை வைத்தியர்களான Dr AM ஜிப்ரி, S மனோரஞ்சிதம் மற்றும் பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.



Post a Comment