மரணம் இப்படியும் வரும்
அமெரிக்காவில் நடந்த, மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற, 86 வயது வீரர் மரணம்அடைந்தார். அமெரிக்காவின், கலிபோர்னியாவில், சான் ஜோஸ் பகுதியைச் சேர்ந்தவர், ஜாய் ஜான்சன், 86. அமெரிக்காவின், ஐந்து நகரங்களை இணைக்கும், 26.2 மைல் தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப் பந்தயம், நியூயார்க் நகரத்தில், இம்மாதம், 3ம் தேதி நடந்தது.
இந்தப் பந்தயத்தில் பங்கேற்ற, ஜாய் ஜான்சன், பந்தய தூரத்தை ஓடி முடித்தபின், மருத்துவ மையத்திற்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக, மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாய், அடுத்த நாள் மரணம் அடைந்தார். ஜான்சன், இதுவரை, 25 முறை, பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த, 1991ல், முதன் முறையாக கலந்து கொண்ட போது, நான்கு மணி நேரத்தில், பந்தய தூரத்தைக் கடந்தார். இவர், மாரத்தான் ஓட்டத்தில், ஆறு முறை முதலிடத்தைப் பிடித்து உள்ளார்.
.jpg)
Post a Comment