அமெரிக்காவுக்கு வெட்கம்..!
ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெஸ்கோ கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலைத் துறைகளைப் பாதுகாக்க இயங்கிவரும் ஒரு அமைப்பாகும். இந்தத் துறைகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பின் மூலம் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநிறுத்த யுனெஸ்கோ முயன்றுவருகின்றது. 195 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றன. கடைசியாக 2011ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தை தனது உறுப்பினராக யுனெஸ்கோ அனுமதித்தது.
இதனை எதிர்த்த அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக தாங்கள் யுனெஸ்கோ அமைப்பிற்கு செலுத்தவேண்டிய கட்டணத்தொகையை செலுத்தவில்லை. யுனெஸ்கோ விதிகளின்படி, இன்று காலை வரை கட்டணத்தொகையை செலுத்துவதற்கும் அவ்வாறு செலுத்தாவிடில் அதற்கான காரணத்தைக் குறிப்பிடுவதற்கும் அமெரிக்காவிற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டுமே நடைபெறாததால் அமெரிக்கா யுனெஸ்கோ தீர்மானங்களில் ஓட்டுப் போடும் தனது வாய்ப்பை இழப்பதாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் யுனெஸ்கோவின் பெருமை வாய்ந்த பாரம்பரியத் தளங்கள் வழியாக உலகப் பண்பாடுகளை பாதுகாக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு முடிவுகளில் அமெரிக்கா தலையிட முடியாது. இந்த அமைப்பின் கீழ்தான் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலை முதல் மாலி நாட்டின் டிம்பக்டூ நகர புராதனங்கள் வரை வருகின்றன.
யுனெஸ்கோ அமைப்பிற்காக அமெரிக்கா வருடத்திற்கு 80 மில்லியன் டாலர் தொகையை செலுத்த வேண்டும். இந்தத் தொகை அந்த அமைப்பின் மொத்த பட்ஜெட் தொகையில் 22 சதவிகிதமாகும். அமெரிக்கா இதனை இரண்டு வருடங்களாக செலுத்தத் தவறியதால் யுனெஸ்கோ அமைப்பு நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதனால் இந்த அமைப்பின் மூலம் அமெரிக்கத் தலைமையில் நடத்தப்பட்டு வந்த இனப்படுகொலைகளுக்கான ஆராய்ச்சியும், சுனாமி குறித்த ஆய்வும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கல்வி மூலம் தீவிரவாதத்தை எதிர்த்தல், ஆண் பெண் சமத்துவம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் போன்ற யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச திட்டங்களில் அமெரிக்கா ஓட்டளிக்கும் உரிமை இல்லாமல் பலவீனமாகக் காட்சியளிக்கும் என்ற கவலை பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்குத் தோன்றியுள்ளது.

அவர்களுக்கு இறைவனின் சாபக்கேடு பிடித்துவிட்டது இனிஅவர்களை யாராலும் பாதுகாக்க முடியாது .எவ்வளவு காலத்துக்கு வலிக்கவில்லை என்று நடிக்கிறது.
ReplyDelete