Header Ads



மல்லிகை மொட்டுக்கள்' புதிய இஸ்லாமியப் பாடல்களின் வெளியீட்டும், மூத்த கலைஞர்கள் கௌரவிப்பும்


(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை யூ.ஜே.நஸாரின் இசையமைப்பில் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை மொட்டுக்கள்' புதிய இஸ்லாமியப் பாடல்களின் இறுவட்டு வெளியீட்டும்,மூத்த கலைஞர்கள் கௌரவிப்புவிழாவும் நேற்று (01-11-2013) மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில்; கவிஞர் அறநிலா தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக முன்னாள் கிழக்குமாகாண மேல்நீதிமன்ற நிதிபதியும், சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீல் கலந்துகொண்டார்.

முதற்;பிரதியை வர்த்தகர் எம்.ஐ.ஏ.பரிட் பிரதம அதிதி முன்னாள் கிழக்குமாகாண மேல்நீதிமன்ற நிதிபதியும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீலிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மறைந்த வி.எம்.இஸமாயில்(மருதுர்கொத்தன்), சக்காப்செட்மௌலானா, ஐ.எல்.அபுல்ஹஸன்,வை.எல்.ஏவாஹிட்,யு.எம்.  சம்சுதீன், ஆகியோருடன் வாழ்து கொண்டடிருக்கும்எம்.வை.எம் மனாப், முபாறக்(மருதவாசி)வை.எல்.எம் இஸ்மாயில்,எஸ்.சகாப்தீன், ஐ.பீர்முகம்மட் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர் இவர்களுக்கான விருதுகளை இவர்களின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.




1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த நெஞ்ஞங்களே!,

    ”புதிய இஸ்லாமிய பாடல்கள்” இது நம் மத்தியில் இன்னும் ஒளியாவன்னம் இருப்பதையிட்டு வேதனைப்பட வேண்டிய காலத்திலும் இன்னும் இதுபோன்ற மார்க்கத்தில் முக்கியதுவமலிக்க படாத ஒன்றுக்கு ஏன் நம் மக்கள் முக்கியத்துவமலிக்கிரார்கள் என்பதை பாருங்கள்!!!!!!!!!

    கீழ்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடைசெய்யப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

    1) அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத் 2494 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

    2) நூல்: புகாரி 5590..அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
    அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது) நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

    3) (முஸ்லிம் 1619) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
    புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள். மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது. நூல்:

    ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டு விடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால், நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.