ஜப்னா முஸ்லிம் இணையம் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியது - றிசாத் பதியுதீன்
(Irshad Rahumadullah)
இணையத்தளங்களின் வரிசையில் முஸ்லிம்களது உரிமை தொடர்பில் முன்னின்று உண்மையானதும்,சரியானதுமான செய்திகளையும், தகவல்களையும் வழங்குவதில் ஜப்னா முஸ்லிம் இணையம் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியது என்று அகில இலங்கை தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்னா முஸ்லிம் இணையத்துக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை முஸ்லிம்களுக்கு தனியான ஒரு ஊடகம் இல்லாத போது ஜப்னா முஸ்லிம் இணையம் அந்த வெற்றிடத்தை கடந்த 4 வருடகாலமாக முன்னெடுத்தவந்துள்ளது.சமூகத்தின் விடயங்களை உடனுக்குடன் வெளிக்கொண்டு வந்ததுடன், உரியவர்கள் அதனை பார்த்து தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையிலும் அதனது சேவை அமைந்திருந்தது.
குறிப்பாக வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் தொடர்பில் அதிக முக்கியத்துவமளித்து உண்மைத் தகவலை ஏனைய சமூகத்தின் வாசகர்களும் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் தமது ஊடகப் பணியினை செய்துவந்துள்ளமையினை நாம் பாராட்டுகின்றோம்.
சில விடயங்களை இலங்கைக்குள் மட்டுமல்ல சர்வதேச சமூகத்தினரும் அறிந்து கொண்டு அதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கக் கூடிய வகையில் ஜப்னா முஸ்லிமின் பணி அமைந்திருந்ததாக கூறியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம ஆசிரியர் மற்றும் பிராந்தியத்திலிருந்து செய்திகளை வழங்கும் செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த 4 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூலம் வாழத்துக்கள தெரிவித்துக் கொள்கின்றேன்.

Post a Comment