சம்மாந்துறைக் கல்விப் பணிப்பாளரை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு தற்காலிகமாக இணைக்க தீர்மானம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
சம்மாந்துறைக் கல்விப் பணிப்பாளரை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு தற்காலிகமாக இணைப்பதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
இன்று(2.11.2013) அட்டாளசைசேனை லொயிட்ஸ் விடுதியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவையின் தீர்மானங்கைள அறிவிக்கும் பத்திரிகையாளர் மகாநாட்டில் மேற்படி தீர்மானத்தை அமைச்சர் தெரிவித்தார். தொடாந்து அவர் அமைச்சாவைத் தீர்மானங்களை தெரிவிக்கும் போது குறிப்பிட்டதாவது,
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரை பதவியிலிருந்து உடனடியாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை. வலயக் கல்விப் பணிப்பாளரின் சேவையை உடனடியாக நிறுத்துதல் தொடர்பாக அமைச்சரவை வாரியத்தினால் தீர்மானத்தை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என தீர்மானித்ததுடன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் அவதானிப்பு மற்றும் சிபாரிசின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரை தற்காலிகமாக இணைப்பதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
அத்துடன்,
1. அம்பாறை மாவட்டத்தில் பாலர் பாடசாலைப் பணியக செயலாற்றுப் பணிப்பாளர் ஒருவரை நியமித்தல்.
2. கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பு பிரிவு ஒன்றினை நிறுவுதல்.
3. தமன பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை தமன பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைத்தல்.
4. கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கிராம அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தல்.
5. லகுகல விகாரமகாதேவி ஆரம்பப் பாடசாலை அமைத்துக்கொள்வதற்கு லகுகலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமாகவுள்ள காணியை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு விடுவித்தல்.
6. புல்மோட்டை கன்ஜவெளி மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாணத்திற்கான விளையாட்டுப் பாடசாலையொன்றை ஆரம்பித்தல்.
7. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இந்திய உதவி வீடமைப்புத் திட்டங்களை விரைபுபடுத்தல்
8. கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் மாற்று மின்சக்தி இணைப்புக்களை கிழக்கு மாகாண கிராமிய அமைச்சினூடாக நடைமுறைப்படுத்தல்
9. ஒப்பந்த அடிப்படையில் விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் உதவி விவசாய பணிப்பாளர்களை நியமித்தல்.
10. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிரந்தர வருமானம் இல்லாத குடும்பத்திற்கு சுயதொழிலுக்கான கொடுப்பனவை அதிகரித்தல.;
11. கிழக்கு மாகாண வீதிப் பராமரிப்பு வேலைக்கான நிதி வழங்குதல.;
12. கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆங்கில, சிங்கள, தமிழ் ஆசிரியர்களின் ஒப்பந்த காலத்தை நீடித்தல்.
13. சட்டப்பிரிவு சட்ட உத்தியோகத்தர்களுக்கான விஷேட கொடுப்பனவு வழங்குதல.;
ஆகிய தீர்மானங்கள் அண்மையில்; கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டம அதன் போது நிறைவேற்றபட்டதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

Post a Comment