நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவரை கல்முனை பிரதி மேயராக நியமிக்க வேண்டுகோள்
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை மாநகர சபைக்கு நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த மாநகர சபை உறுப்பினரை பிரதி மேயராக நியமிக்க வேண்டும் என நற்பிட்டிமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தலைவர் ரவுப் ஹக்கீமை கேட்டுள்ளனர்.
போராளிகளின் புண்ணிய பூமி என மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் புகழப்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்துக்கு இதுவரை காலமும் அரசியல் அந்தஸ்துள்ள பதவிகள் வழங்கப் படவில்லை . இந்த கிராமத்தவர்கள் ஏனைய கிராமங்களோடு போட்டி போடவும் முடியாது. ஆனால் தேர்தல் வந்து விட்டால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை தவிர வேறு எதுவும் தெரியாதென கூறுபவர்கள் அப்படி பட்ட போராளிகள் நிறைந்த எமது கிராமத்துக்கு பிரதி மேயர் பதவி வழங்கப் படுவது பொருத்தமானதாக இருக்கும் .
நற்பிட்டிமுனை கிராமத்துக்கு பிரதிமேயர் பதவியை வழங்குவதன் மூலம் ஊர்வாதம் ஏற்ட்படுவத்தையும் தடுக்கலாம் பிரச்சினைகளும் எழாது . எமது கிராமத்துக்கு பிரதி முதல்வர் பதவியை வழங்குவதற்கு கல்முனை குடி மக்களோ, சாய்ந்தமருது மக்களோ அல்லது மருதமுனை மக்களோ எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நற்பிட்டிமுனை மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை கேட்டுள்ளனர்.

Mohamed Aaeis
ReplyDeleteநற்பிட்டிமுனை மக்களின் நியாயமான கோரிக்கை. நீதி அமைச்சருக்கு நீதி நியாயம் தெரிந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார்.