உலக எய்ட்ஸ் தினம்...!
எச்.ஐ.வி., எனும் வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் மனித உடலில் உள்ள செல்களில் பரவுகிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நலிவுற்ற நிலையை எச்.ஐ.வி., வைரஸ் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, கடைசியில் மரணம் ஏற்படுகிறது.
எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், டிச.,1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 2011 முதல் 2015 வரை "கெட்டிங் டூ ஜீரோ : புதிய எச்.ஐ.வி., பாதிப்பு வராமல் தடுப்பது; எய்ட்சால் ஏற்படும் இறப்பை தடுத்தல்' என்பது இத்தினத்தின் மையக்கருத்து.
எப்படி பரவுகிறது:
பாதுகாப்பற்ற உறவு, எச்.ஐ.வி. உள்ள தாய் மூலம் குழந்தைக்கு, பரிசோதிக்கப்படாத ரத்தம் மற்றும் சுத்திகரிக்கப்படாத ஊசி ஆகிய காரணங்களால் மட்டுமே எய்ட்ஸ் உருவாகிறது. இதைத்தவிர அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவதாலோ; அவர்களை தொடுவதாலோ; அவர்களுடன் உணவை பரிமாறிக் கொள்வதாலோ எச்.ஐ.வி., பரவுவதில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தும், எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் எச்.ஐ.வி., வைரசின் வீரியத்தை குறைக்கும் மருந்தை கண்டுபிடித் துள்ளனர். எய்ட்சை குணப்படுத்த முடியாவிட்டாலும், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சிகிச்சை முறைகள் உள்ளன.
ஆண்டுதோறும் 16 லட்சம் பேர்:
உலகளவில் 2012ல் புதிதாக 23 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி., வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. 2001ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 33% சதவீதம் குறைந்துள்ளது. 2012 கணக்கின் படி, 3 கோடியே 53 லட்சம் பேர் எச்.ஐ.வி., நோயுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் 16 லட்சம் பேர் எய்ட்சால் இறக்கின்றனர் என ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. 2012 கணக்கின் படி, இந்தியாவில் தற்போது 21 லட்சம் பேர் எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 39 சதவீதம் பேர் பெண்கள். 7 சதவீதம் பேர் குழந்தைகள். 1.40 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
.jpg)
Post a Comment