அடிவயிற்றில் உள்ள இதயம் இடமாறுமா..? (படம் இணைப்பு)
சீனா ஹினான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ ஷிலியாங் (24). முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். பிறக்கும்போது ஷிலியாங் அடிவயிற்றில் இருந்து இதய துடிப்பு சத்தம் கேட்டது. அவனது பெற்றோர் முதலில் இதை சாதாரணமாக எடுத்துகொண்டனர்.
நாளடைவில் ஷிலியாங் இதயம் இடம் மாறி அடிவயிற்றில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நிலையில் மகன் நீண்ட நாள் உயிர் வாழ மாட்டான் என்று கருதி அப்படியே விட்டு விட்டனர். ஷிலியாங்கால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. கடினமான வேலை, ஓடினால் மூச்சி இறைப்பு ஏற்பட்டது. அடிவயிற்றில் இதயம் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. இந்த நிலையில் பத்திரிக்கை செய்தி ஒன்றில் இதே போல் காக்ஜென்டியல் கார்டியாக் எக்ஸ்போஷர் சின்டம்ஸ் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்ட ஹூயாங் ரூங்மிக் என்ற வாலிபருக்கு கடந்த 2012ல் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து இதயத்தை இடமாற்றம் செய்து சாதனை படைத்தனை ஷிலியாங் படித்துள்ளார்.
இதேபோல் தானும் அறுவை சிகிச்சை செய்ய விரும்பி ஹெனான் மாகணத்தில் உள்ள ஆஸ்பத்திரில் சேர்ந்துள்ளார். சீன டாக்டர்கள் ஷிலியாங்கிற்கு அறுவை சிகிச்சை மூலம் அடிவயிற்றில் உள்ள இதயத்தை இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் பொருத்த உள்ளனர். இதன் மூலம் தனக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஷிலியாங் உள்ளார். -

Post a Comment