Header Ads



யாழ்ப்பாணம் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கத்தின் வேண்டுகோள்

யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் புராதன, இடைக்கால மற்றும் இடம்பெயர்வுக்கு பின்னரான வரலாறுகளைகளையும் மக்களின் தகவல்களையும் உள்ளடக்கிய நூலொன்றை வெளியிடவுள்ளது யாவரும் அறிந்ததே. இதற்காகவேண்டி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து மறைந்த தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆலிம்கள், ஆலிமாக்கள், மௌலவிகள், காரிகள், வைத்தியர்கள், நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பட்டதாரிகள், மாணவ பட்டதாரிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், என்ஜினியர்கள், காதிகள், திருமணப்பதிவாளர்கள், விளையாட்டு வீரர்கள் (உதைப்பந்தாட்டம், கிறிகட், கூடைப்பந்து, மரதன், ஓட்டப்போட்டிகள்), கராட்டே, சிலம்படி, ஜுடோ மற்றும் எத்துரையிலாவது பிரகாசித்தவர்கள், பங்களிப்பு செய்தவர்கள் தமது விபரங்களை உடனடியாக அனுப்பவும். 

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம், புத்தளம், வவுனியா, அனுராதபுரம், மதவாச்சி, இக்கிரிகொல்லாவ, கற்பிட்டி, நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை, தர்காநகர், பேருவிலஈ மாத்தளை, கண்டி போன்ற பிரதேசங்களை சேர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள்  தமது  விபரங்களை ஏற்கனவே தந்துவிட்டனர். மேலும் கனடா மற்றும் ஐக்கிய ராச்சியத்திலுள்ள சிலரும் தமது  தகவல்களை தந்துள்ளனர். ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ளோர் தமது விபரங்களை இதுவரை அனுப்பவில்லை. இது ஒரு வரலாற்று புத்தகம். அடுத்த தலைமுறையினருக்கு நமது வரலாறு என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் இப்புத்தகம் சொல்லும். யார் யார் எந்த ஊரில் எந்த நாட்டில் வாழ்கின்றனர் என்ற விபரங்களும் வெளிவரும். இதனூடாக மறந்து போன தொடர்புகள் மீண்டும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

எனவே தயவு செய்து வெளிநாடுகளில் உள்ளோர் யாழ்ப்பாண முஸ்லிம்களை உள்ளடக்கிய குரூப் போட்டோக்கள் இருந்தால் அவற்றை ஈமெயில் செய்யவும். அவை புத்தகத்தில் பிரசுரிக்கப்படும். முழுத்தகவல்களையும் தர விரும்பாதவர்கள் தொலைபேசி மற்றும் விலாசத்தை கொடுக்காமல் தமது பெயரையும் நாட்டையும் தமது போட்டோக்களையும் கொடுக்கலாம். மேலும் யாரிடமாவது யாழ்ப்பாணம் சம்பந்தப்பட்ட பழைய வீடியோக்கள் இருக்குமாயின் அவற்றையும் எமக்கு தந்துதவலாம். தயவு செய்து இந்த தகவல்களை தமது நண்பர்கள் உறவினர்களுக்கு எடுத்துச் சொல்லவும். 

தனது சமூகத்தை அறியாதவன் தன்னை அறிய மாட்டான் என்று ஒரு முதுமொழியுள்ளது. வரலாறுகளை சேகரித்து வைப்பது ஒரு கடமை. புனித அல்குர்ஆனில் பல நபிமார்களின் சரித்திரங்கள் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் நான்கு கலீபாக்கள் உட்பட ஸஹாபாக்களின் வரலாறும் யுத்தங்களின் வரலாறும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.  எனவே தங்களுக்கு தெரிந்த விபரங்களை தமிழிலோ ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து எமக்கு ஈமெயில் மூலம் அனுப்பவும். ஈமெயில் முகவரி: jmrojaffna@gmail.com.  


1 comment:

  1. யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழ்விடத்தை தொலைத்து, வரலாற்றை இழந்து நிற்பதால், யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான / அந்த சமூகத்தை சேர்ந்த தனி நபர்கள் விபரங்களை அடக்கிய நூலொன்றை வெளியிடுவது மிகவுமே பொருத்தமான முயற்சி.

    முடியுமான வரை அதிகமானவர்களின் தகவல்களை இணைத்து வெளியிடும் படி ஏற்பாட்டுக் குழுவினரை பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

    இதனை அவசரமாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்காமல், இதனை நிறைவு செய்வதற்கு ஓரிரு வருடங்கள் போனாலும் பரவாயில்லை, திருப்திகரமாகவும், முழுமையாகவும் பூரணப் படுத்துவது, தங்கம், வைரத்தை விட யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெறுமதியாக இருக்கும்.


    வெளியிடத் திட்டமிட்டுள்ள மேற்படி நூலில், யாழ்ப்பணத்தில், யாழ்ப்பாணம் சொனகதேருவின் கலாச்சாரத்துடன் / வாழ்வுடன் ஒன்றிப் போய், சொனகதேருவிட்கே உரிய தனித்துவத்துடன் புகழ் பெற்று விளங்கியவர்கள் (வியாபாரிகள்,/ த்நீர்க்கடை உரிமையாளர்கள், / வேல்லைக்கடட்கரை திடர்புடியாய புள்ளிகள்) என்று அனைவரையும் உள்ளடக்க வேண்டும்.

    உதாரணம் : மொக்கன் ரோல்ஸ் கடை, வதூதுக்கக்கா கடை, தென்னிந்தியாவில் இருந்து வந்து போன (போலி?) ஷேஹுகள்... போன்றவை கூட உள்ளடக்கப்படல் வேண்டும்.


    முக்கிய குறிப்பு : மேற்படி தராதரமும், தரப்படுத்தலும், விருது வழங்கு வதற்கு ஒரு போதுமே பொருத்தமில்லை. (விருது வழங்குதல் என்பதையும், நூல் வெளியிடுதல் என்பதையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்)

    ஏற்பாட்டுக் குழு, நிதி தொடர்பான அவர்களது எதிர்பார்ப்புகளை (estimation) வெளியிட்டால், விருப்பமுள்ளவர்கள் உதவி செய்யவும் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.