Header Ads



கல்முனை மாநகர சபையில் கையொப்பமிடாமல் திருட்டாக சம்பளம் பெற்றவர்கள்..!

(MII) கல்முனை  மாநகர சபையில் கையொப்பமிடாமல்  திருட்டுத்தனமாக இரண்டுவருடங்களாக சம்பளம் பெற்றுவந்த இருவரை  கணக்காய்வு அதிகாரிகள்   பிடித்துள்ளனர்.

 இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

கல்முனை மாநகர சபை மற்றும்   பிரதேச செயலகங்களில்  கணக்காய்வு   திணைக்கள அதிகாரிகள் கணக்காய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .  இதன் போது  கல்முனை  மாநகர சபையில்   கடமை செய்யாத  இருவர்   கடமை செய்ததாக காண்பித்து சம்பளம் பெற்று  வந்துள்ளமை  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மருதமுனையை சேர்ந்த   ஒருவரும்,    சாய்ந்தமருதை  சேர்ந்த ஒருவருமே இவ்வாறு சம்பளம் பெற்று வந்துள்ளனர். வரவு இடாப்பில் பெயர் இல்லாத நிலையில் கொடுப்பனவு உறுதி சீட்டில் ஒப்பமிடப்பட்டு  கொடுப்பனவு வழங்கப்பட்டு  வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கணக்காய்வு அதிகாரிகள் ஆவணங்கள்  எடுத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.  

 மாநகர சபை உயர் அதிகாரி ஒருவரின்  உதவியுடன்  அங்கு    பணியாற்றும்  அதிகாரி ஒருவரின் மகன்  இதனுடன்  சம்பந்தப்பட்டுள்ளமை என்பது  ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றும் ஒருவர் வெளிவெளிநாடு சென்று விட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


2 comments:

  1. அங்கே பணிபுரியும் அனேகம்பேர் திண்ட்டுக்கிட்டு இருக்காங்க -நாமும்தான் கொஞ்சம் நக்கிப்பார்ப்போமே ! என்று நினைத்து செய்திருப்பாங்க
    இதெல்லாம் சகஜம்பா

    ReplyDelete
  2. மாடிகிட்டாயே செவ்வாழ .....இனி சங்குதான்

    ReplyDelete

Powered by Blogger.