Header Ads



மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பப்பங்கள் கோரப்பட்டுள்ளன

 (ஏ.எல்.ஜுனைதீன்)

மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரியில் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கென விண்ணப்பப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

அல் குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்த 9 ஆம் தரத்திற்கு சித்தியடைந்த 14 வயதைத் தாண்டாத மாணவர்கள்  இதற்கென விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆறு ஆண்டுகளை கற்கை நெறியாகக் கொண்டுள்ள பாடத்திட்டத்தில் ஷரிஆ கற்கை நெறியுடன் கல்விப் பொதுத் தராதர ( சாதாரண ) தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தயார்படுத்தல், கம்பியூட்டர் துறையில் டிப்ளோமா, உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டல், இஸ்லாமிய வங்கி போன்ற துறைகளில் பயிற்சி போன்றன அடைவுகளாகக் கொள்ளப்படுகின்றன.

தகுதியுள்ள மாணவர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்.

தெரிவுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0773063818  0772907803 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். 

No comments

Powered by Blogger.