நாளை வெள்ளிக்கிழமை நாடு பூராகவும் 6 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன
(எம்.எம்.ஏ. ஸமட்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் மற்றும் ஜனாதிபதியின் இரண்டவாது பதவிக்கால ஆரம்பம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு 4வது வருடமாக இடம்பெறும் வளமான தேசத்துக்கான தேசிய மரநடுகை முன்னெடுப்புக்கள் நாளை(15) காலை 10.03 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என சுற்றாடல் மற்றும் மீள்சக்தி வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இம்மரநடுகை முன்னெடுப்புக்களின் போது நாடு பூராகவும் 6 இலட்சம் மரக்கன்றுகள் அமைச்சினால் நடப்படவுள்ளன. மேலும் 6 இலட்சம் மரகன்றுகள் பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களினால் நடப்படும்.
இவ்வாண்டின் வளமான தேசத்துக்கான தேசிய மர நடுகை முன்னெடுப்பின் தொணிப்பொருள் வளமான எதிர்காலத்திற்கு நாட்டை மரங்களினால் நிரப்புவோம் என்பதாகும்.
ஆத்துடன், தற்போதுள்ள நாட்டின் 29 வீத காட்டு வளத்தை 2020ஆண்டளவில் 35 வீதமமாக மாற்றுவதே இந்த மரநடுகை முன்னெடுப்பின் இலக்காகவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடுகிறது.
இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட மர நடுகை வைபவம் இன்று(14) மாலை 4.30 மணிக்கு ஹம்பாந்தோட்டையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மிரிஜிவத்தை தாவரவியல்; பூங்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன்; நடைபெற்றது. இம்மர நடுகை வைபவத்தின்போது 53 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
அரிதானதும் பெறுமதிமிக்கதுமான வரண்ட வலயப் பிரதேசங்களில் நடக்கூடியதுமான மரக்கன்றுகள் நடுகைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
மிரிஜிவத்தை தாவரவியல் பூங்கா 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வரண்ட வலயத்தின் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பூங்கா இந்த மிரிஜிவதிதை தாவரவியல் பூங்கா என்பது சுட்டிகாட்டத்தக்கது.
அத்துடன,; உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment