Header Ads



வெளிநாட்டு அரச தலைவர்களின் வருகைக்காக மூடப்பட்டிருக்கும் வீதிகள் (படங்கள்)

(ஏ.எல்.ஜுனைதீன்)

கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய  உச்சி மாநாட்டுக்கு  நாட்டுத் தலைவர்கள் வருகை தருவதையொட்டி பெஸ்லைன் – பொரளை வீதி பொது மக்களின் வாகனங்கள் போக்கு வரத்து செய்ய முடியாமல் அடிக்கடி மூடப்படுகின்றது.

சாதாரண நேரங்களில் கூட அதிக எண்ணிக்கையான வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யும்  இம் முக்கிய பாதை மாலை நேரத்தில் நெடு நேரத்திற்கு மூடப்படுவதால் தொழில் நிமிர்த்தம் அலுவலகம் சென்றவர்கள் உரிய வேளைக்கு வீடு செல்ல முடியாமல் வீதியில் காத்துக்கிடந்து அவதிப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இன்று 14 ஆம் திகதி ஒரு கட்டமாக மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை மூடப்பட்ட இப்பாதை வாகனப் போக்கு வரத்து எதுவும் இன்றி வெறிச்சோடிக் கிடப்பதைக் காணலாம்.




No comments

Powered by Blogger.