Header Ads



புதுடெல்லி 4 முறை அதிர்ந்தது - மக்கள் அலறி அடித்து ஓட்டம்


புதுடெல்லியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர்.

டெல்லியில் இன்று அதிகாலை 12.41 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4 விநாடிகள் வரை நீடித்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், தெற்கு டெல்லியில் உள்ள சைனிக் பார்ம்ஸ் பகுதியை மையமாக கொண்டிருந்தது. இப்பகுதியை சுற்றி சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாலும், நிலநடுக்கம் சிறிய அளவில் இருந்ததாலும் உடனடியாக பரபரப்பு எதுவும் ஏற்படவில்லை. சில இடங்களில் விழித்திருந்த மக்கள் அலறியடித்து வீட்டை வெளியேறி, சாலைக்கு வந்து நின்றனர். எனினும், சில நிமிடங்களில் அவர்களும் வீடு திரும்பி விட்டனர்.

 அதன்பின், அதிகாலை 1.41 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவானது. இந்த முறை மானேசர் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இதனால், டெல்லி மட்டுமின்றி காசியாபாத், நொய்டா ஆகிய புறநகர்களிலும் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து, தெற்கு டெல்லியிலேயே அதிகாலை 1.55 மணிக்கு ஒரு முறையும், 3.40 மணிக்கு ஒரு முறையுமாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை முறையே ரிக்டர் அளவுகோலில் 2.5 மற்றும் 2.8 ஆக பதிவாகியிருந்தது. அதிகாலையில் 4 மணி நேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கமாகவும், 2 முறை சாதாரண அதிர்வுகளாகவும் காணப்பட்டது என்று புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன என்றும், சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு விழுந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். சிலர் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இடியோசை போல் கேட்டதாக டுவிட்டரில் பதிவு செய்தனர். நிலநடுக்கத்தை உணர்ந்ததும் ஏராளமான மக்கள் டுவிட்டரில் இதனை பதிவு செய்ததால் டெல்லியில் பல இடங்களில் மக்கள் உஷார் அடைந்தனர்,/

No comments

Powered by Blogger.