Header Ads



அப்பாவி பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் ஆயத்துல்லாஹ் அலி கொமைனி

(Tn)  ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமைனி நாட்டின் சுமார் 95 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தகங்களை கட்டுப்படுத்தி வருவதாக ராய்ட்டர் செய்திச் சேவை மேற்கொண்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இது ஈரான் எண்ணெய் ஏற்றுமதி மூலம் பெறும் ஆண்டு வருமானத்தை விடவும் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

பெரிதும் அறியப்படாத 'சதத்' என்ற அமைப்பினூடாகவே ஈரான் தலைவர் தனது வர்த்தக வல்லமையை நிலைநாட்டி வருவதாகவும், குறித்த அமைப்பு ஈரானின் குறைந்தது அனைத்து வர்த்தகத்துறையிலும் பங்கு வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சதத் அமைப்புக்கு எண்ணெய், தொலைத்தொடர்பு உட்பட நெருப்புக்கோழி பண்ணைகளிலும் பங்கு இருப்பதாக ராய்ட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான சாதாரண பொதுமக்களின் உடைமைகளை திட்டமிட்டு கையகப்படுத்தி சதத் தனது வர்த்தக வல்லரசை கட்டியெழுப்பியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. கடவுள் பெயரில் திருடும் திருடர்கள்

    ReplyDelete

Powered by Blogger.