கிழக்கு மாகாண 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பாக ஆராய்வு
(ஏ.எல்.ஜனூவர்)
2014 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வரவு – செலவு திட்டம் தொடர்பான முன்னேற்றம் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கிழக்கின் வெற்றிப்பாதை பத்திரிகை வெளியீட்டு தொடர்பான முன்னேற்றக் கூட்டம் கல்முனை பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் காரியாலயத்தில் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
வரவு – செலவு திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மாகாண வீதி திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.கருணைநாதன், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.திலகராஜா, மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment