வீரகெட்டிய பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதி
(ஜே.எம். வஸீர்)
50 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீரகெட்டிய பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதியினை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2013.11.06ம் திகதி நாளை புதன்கிழமை பி.ப. 04.30 மணிக்கு வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஸபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஸபக்ஷ, மஹிந்த அமரவீர, தென்மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் சில்வா, பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, தென்மாகாண ஆளுனர் கௌரவ குமாரி பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வி.கே. இன்திக, தேசிய பாதுகாப்பு மற்று நகர அபிவிருத்தி அமைச்pசன் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க், வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவர் பியசேன லியனாரச்சி உள்ளிட்ட இன்னும் பல மக்கள் பிரதிநிதிகளும் அரச உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


Post a Comment