Header Ads



ஐக்கிய தேசிய கட்சி வெற்றிப் பயணத்தை ஆரம்பிக்குமா..? தலைமைத்துவ சபைக்கு 19 அதிகாரங்கள்

(Adt) ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பயணத்தை இலக்காக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தலைமைத்துவ சபைக்கு 19 அதிகாரங்களும் பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வசம் இருந்த செயற்குழுவால் வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் தலைமைத்துவ சபைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அதன் விபரங்கள் வருமாறு, 

01) கட்சியின் அனைத்து தராதரத்திற்குமான கொள்கை மற்றும் தேசிய உபாயமார்க்கம் தயாரித்தல். 

02) உறுப்புரிமையை மேம்படுத்திக் கொள்ளவென ஆட்சேர்ப்பு முன்னேற்ற வேலைத்திட்டங்களை தயாரித்தல். 

03) கட்சியின் தலைவரிடம் ஆலோசித்து தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல். 

04) கட்சி உறுப்பினர்கள் ஊடாக வழங்கப்பட வேண்டிய ஏற்பாடு, உத்தரவுகளை பிறப்பித்தல். 

05) குறித்த ஏற்பாடுகளை பின்பற்றாதவிடத்து நிர்வாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல். 

06) கட்சியின் தலைவரிடம் ஆலோசித்து வேட்பு மனு சபை உருவாக்குதல், வேட்பு மனு வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தயார்படுத்தல். 

07) வேட்பு மனு வழங்கப்படும்போது ஏற்படும் கருத்து முரண்பாடுகளை நிவர்த்தி செய்து வைக்க தலையிடுதல். 

08) கட்சியின் அதிகாரிகள் மற்றும் அமைப்பாளர்களின் செயற்பாடுகளை கண்காணித்தல். 

09) கட்சியின் அதிகாரிகள் மற்றும் அமைப்பாளர்கள் எட்டவேண்டிய இலக்குள் அதற்கான கால வரையறையை வழங்குதல். 

10) சபையின் தேவைக்கு ஏற்ப எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியின் அதிகாரிகளை அழைப்பது மற்றும் செயற்பாடுகள் குறித்து சுயாதீன கண்காணிப்பு அறிக்கை அல்லது கருத்து கோருதல். 

11) கட்சியின் அதிகாரிகள் மற்றும் அமைப்பாளர்களின் செயற்பாடுகளை முன்னேற்ற அல்லது கடினமான சந்தர்ப்பங்களில் மாற்று நடவடிக்கைகளை எடுத்தல். 

12) கட்சியிள் தொழிற்சங்க அமைப்பு மற்றும் இணைந்த அமைப்புக்களின் முன்னேற்றம் குறித்து பரிந்துரைகளை முன்வைத்தல். 

13) தொடர்பாடல் மற்றும் பிரச்சார செயற்பாடுகள் குறித்து யோசனை முன்வைத்தல், செயற்படுத்தல் மற்றும் கண்காணித்தல். 

14) அடிமட்டத்தில் அமைப்புகளை உருவாக்கி அவற்றை வலுப்படுத்தி தேவையான திட்டம் கால எல்லை, இலக்கு வழங்குதல் மற்றும் கண்காணித்தல். 

15) எந்தவொரு தேர்தல் போட்டியையும் இயக்க சபையின் உறுப்பினர் அல்லது உறுப்பினர்களை நியமித்தல். 

16) தேர்தலில் போட்டியிடவென தேவையான உபசபை, கட்சியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசர சபை அல்லது உபசபை, நிர்வாக செயற்பாடுகளை திறம்பட செயற்படுத்தி செல்வதற்கு தேவையான வேறு நியமனங்கள். 

17) தேர்தல் மேடைகளில் உரையாற்றும்போது பேச்சாயர்களுக்கு தேவையான உத்தரவு அல்லது கட்டளை பிறப்பித்தல். 

18) செயற்குழுவினால் எடுக்கப்படும் ஏனைய தீர்மானம், தீர்ப்பு என்பவற்றை செயற்படுத்த தேவையான உத்தரவு, கட்டளை பிறப்பித்தல் மற்றும் ​அது தொடர்பில் கண்காணித்தல. 

19) சபையின் பரிந்துரை, யோசனை என்பவற்றை செயற்குழுவிற்கு வாராந்தம் முன்வைத்தல். 

இதேவேளை ஐக்கிய தலைமை சபையை இயக்க செயற்பாடுகளுக்காகவும் அதற்கு மேலான வேறு அதிகாரங்கள் தேவைப்படுமாயின் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முன்வருதல். முன்வருதலுக்கான ஏற்பாடு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

தலைமைத்துவ சபை 9 உறுப்பினர்களைக் கொண்டு கரு ஜயசூர்யவின் தலைமையின் கீழ் இயங்கும். 

ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தேசிய தலைவராகவும் எதிர்க் கட்சித் தலைவராக பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஏனை கட்சிகள் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் தலைமை வகிப்பார். 

மேலும் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான பொறுப்பும் தேசிய தலைவருக்கே உரியது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. முதல் படுத்துட்டு போத்தின, இப்ப போத்திட்டு படுக்கிற இரண்டும் ஒனறுதான்.

    ReplyDelete

Powered by Blogger.