Header Ads



அனுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

அனுராதபுரத்தில் வீடொன்றிலிருந்து இன்று காலை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் ஹல்முல்ல என்னும் பிரதேசத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள், தாயின் சகோதரி, அவரது மகன் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

இவர்களது உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெட்டுக்காயங்களுக்கு உள்ளான கே.ஏ.பியதாஸ என்பவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.