ஐ.தே.கட்சியை வெற்றி நோக்கி இட்டுச் செல்லும் 100 நாள் வேலைத்திட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் கரு ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தலைமைத்துவச் சபை, கட்சியின் வெற்றிக்காக 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தீர்மானித்துள்ளது.
தலைமைத்துவச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி கடமைகளை பெறுப்பேற்கவுள்ளனர். அன்றைய தினத்தில் இருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அத்துடன் தலைமைத்துவச் சபையில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச மற்றும் தலதா அத்துகோரள ஆகியோருக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கட்சியை வெற்றிப் பெற செய்ய வேண்டியது தலைமைத்துவச் சபையின் பிரதானமான குறுகிய கால நோக்கமாகும். அத்துடன் கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் நீண்டகால செயற்திட்டமும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment