ஊடகவியலாளர் றிப்தி அலி பலஸ்தீனம் பயணம், மு.மீ.போ. பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பலஸ்தீனத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயணமாகியுள்ளார்.
பலஸ்தீனத்தில் நடைபெறும் இரண்டாவது பலஸ்தீன் இளைஞர் வார நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே றிப்தி அலி சென்றுள்ளார். இதன்போது பலஸ்தீன் முன்னாள் ஜனாதிபதி யாசீர் அரபாத்தின் எட்டாவது நினைவு தினம் மற்றும் பலத்தீன் சுதந்திரம் உள்ளிட்ட பல ந்pகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் காரணமாக எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
.jpg)
Post a Comment