Header Ads



எனக்குப் பிடித்த கவிதை வரிகள் - ரவூப் ஹக்கீம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)      

கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய பாம்புகள் குளிக்கும் நதி கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை  (27) இலங்கை தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக நிதியமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாறும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் தொடந்து உரையாற்றுகையில்,

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் சந்தோசம் அடைகின்றேன் இளம் வயதில் கலை உலகில் இலக்கியச் சுத்தத்துடன் தொகுக்கப்பட்ட அஸ்மினின் கவிதையானது மிகவும் பயனுள்ள நல்தொரு கவிதைத் தொகுப்பாகவுள்ளதை அவரின் இந்தத் தொகுப்பு சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

கோலாலம்பூரில் இடம்பெற்ற தனது மரபுக் கவிதைத் தொகுப்பை சிறப்பாக வழங்கி இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்களில் வளர்ந்த அஸ்மின் தற்காலத்தில் மிகவும் பயனுள்ள மரபுக் கவிதைகளை சுனாமி அனர்த்தங்களின் அவலங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளமை சிறப்பானதாகும்.

விறுவிறுப்பாக இலங்கியச் சுவையுடன் பல அழகான கவிதைகளை எழுதும் ஆற்றல் கொண்டவராக இவர் காணப்படுகின்றார். இவரின் இவ்வாறான இலக்கியக் கவிதைத் தொகுப்புக்கள் தற்காலத்தில்  அனைவராலும் விரும்பப்படுவதாகவே அமைகின்றது.

எனவே இந்த இளம் வயது கவிஞரின் இலக்கிய ஆர்வமும், அவரின் ஆற்றலும் மெச்சத்தக்கதுடன் எனக்குப் பிடித்த பல கவிதை வரிகள் மிகவும் சிற்பாக வார்க்கப்பட்டுள்ளமையானது பாராட்டுக்குரியது என்றார் அமைச்சர்.

No comments

Powered by Blogger.