திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் அச்சமாகவுள்ளது - ஹுனைஸ் பாருக் எம்.பி.
கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய பாம்புகள் குளிக்கும் நதி கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை (27) இலங்கை தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக ஹுனைஸ் பாருக் எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்ததாவது,
இந்த மேடையில் இருப்பவர்கள் எல்லோரையும் திரும்பிப் பார்க்கும்போது எனக்கு மிகவும் அச்சமாகவுள்ளது. நான் எத்தனையோ மேடைகளில் ஏன் பாராளுமன்றில் கூட பேசியிருக்கின்றேன் அவற்றில் ஏற்படாத அச்சம் இன்று எனக்கு ஏற்பட்டுள்ளது ஏனெனில் அனைவருமே இலக்கியத்துறையில் சிறப்பானவர்களாக இங்கு காணப்படுவதாகும்.
அஸ்மினின் கவிதைத் தொகுப்புக்களை நோக்கும்போது அவரை ஒரு வித்தியாசமான ஒருவராகவே நோக்குகின்றேன் அந்தளவிற்கு திறமையுள்ள ஒரு இளம் கவிஞராக அவரின் கவிதைத் தொகுப்புக்கள் இந்த இலக்கிய உலகில் மிளிர்கின்றன.
இன்றைய கவிதை உலகில் கவிகைளைப் படைப்பவர்களின் கவிதைகளில் ஏதாவது ஒன்னிரண்டு விடயங்களைப் பார்க்கலாம் ஆனால் அஸ்மினின் இந்த பாம்புகள் குளிக்கும் நதி கவிதைத் தொகுப்பில் பல்வேறுபட்ட சுவையான விடயங்களை உவமான, உவமேயங்களுடனும் எதுகை, மோனைவிடயங்களுடனும் சிறப்பான முறையில் அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்துள்ளதை காணக் கூடியதாகவுள்ளது.
சமுகத்தின் யதார்த்தத்துக்குள் பாதிக்கப்பட்டு ஏன் சுனாமியினால் கூட பாதிக்கப்பட்டு அனுபவித்த விடயங்களைக் கூட தத்ரூபமாக வெளிக் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அஸ்மின் இத்தொகுப்பை வெளியிடுகின்றார்.
அஸ்மினின் கவிதையில் தற்கால அரசியல் வாதிகளுக்குக் கூட பயனுள்ள கவிதை வரிகள் சேர்க்கப்பட்டு உள்ளமையானது தற்காலத்திற்குத் தேரவையானது மட்டுமல்லாது சோர்வானவர்களைக் கூட தட்டிக் கொடுத்து சுறுசுறுப்பானவர்களாக ஆக்கும் வகையில் அமைந்துள்மையை இட்டு மிக மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் ஹூனைஸ் எம்பி.
Post a Comment