யாழ் மாநகர சபையினால் அங்காடி வியாபாரிகளுக்கென அமைக்கப்பட்டிருந்த கடைகள் உடைப்பு
(f.sihan)
யாழ் மாநகர சபையினால் அங்காடி வியாபாரிகளுக்கென அமைக்கப்பட்டிருந்த கடைகள் தற்போது உடைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் நடைபாதை வியாபாரிகள் தொடர்பாக யாழ் மாநகர சபைக்கு கிடைக்கப்பெற்ற வேண்டுகோளினால் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் ஆரம்பித்த வைக்கப்பட்டது.ஆனால் இங்கு ஆரம்பத்தில் வியாபாரங்கள் மேற்கொண்ட போதிலும் ஏனைய சந்தைகள் பொன்று களைகட்டவில்லை.
இதன் காரணமாக அங்கிருந்து பழைய நடைபாதை வியாபாரத்திற்கு இங்காடி வியாபாரிகள் இறங்கியுள்ளனர்.
தற்போது பழைய நிலையில் வீதிக்கரையில் ஆரம்பித்துள்ள வியாபாரத்தினால் வீதிப்பயணத்தில் ஈடுபடுவோர் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இத தவிர குறித்த அங்காடி தெரு 107 கடைகளை கொண்டு காணப்பட்ட போதிலும் தனியார் காணியில் அமைந்துள்ளதுமாகும். இதனால் தனியாருக்க மாத வாடகை சீராக யாழ் மாநகர சபை வழங்க மறுத்ததினால் ஒப்பந்த அடிப்படையில் மேற்படி கடையுடைப்பு மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ் மாநகர ஆணையாளரிடம் வினவியபோது இதற்கும் எனக்கும் தொடர்பில்லை மேயரிடம் தான் கேட்க வேண்டும் என்றார. இக்கடையுடைப்பு தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்'பிடத்தக்கது.



Post a Comment