யானை தாக்கி மாணவன் வபாத்
மட்டடக்களப்பு கரடியனாறு உறுகாமம் காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுவன் ஒருவன் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக கரடினாறு பொலிஸார் தெரிவித்தனர்.
உறுகாமம் பஞ்சாடிச்சோலையை சேர்ந்த ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் ஜெமீல் தஸ்லீம் (வயது 12) என்ற மாணவனே காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கிழக்கில் தற்போது வரட்சி நிலை இடம்பெற்று வருகின்ற காரணத்தால் மழை வேண்டி நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்ற இச்சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிராத்தனை முடிவுற்றதும் நண்பனுடன் காட்டுப் பகுதிக்கு விளையாடச் சென்ற வேளை இவ்வனர்த்தம் எற்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் யானைகள் அதிகமாக நடமாடும் உறுகாமக் காட்டிலே கிடப்பதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை சடலத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment