கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியின் மாணவர்களின் 'சிறு துளிகள்' வெளியீட்டு விழா
(எ.எஸ்.எம்.ஜாவித்)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு-12 அல்-ஹிக்மா கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான 600 ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய சிறு துளிகள் 2013 எனும் நூல் வெளியீட்டு விழா இன்று 12-10-2013 கல்லூரியின் அதிபர் கே.எம்.எம்.நாளிர் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஏ.எஸ்.ரேடர்ஸ் உரிமையாளர் எஸ்.எச்.எம்.அஷ்ரபும் கௌரவ அதிதியாக எப்.எஸ்.மொபைல் செண்டர் உரிமையாளர் எம்.எஸ்.எம்.புவாட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் நூலின் முதற் பிரதிகளை அதிபர் கே.எம்.எம்.நாளிரிடம் இருந்து ஊடகவியலாளர் இர்ஷாட் ஏ காதர், பிரதம அதிதி எஸ்.எச்.எம்.அஷ்ரப், கௌரவ அதிதி எம்.எஸ்.எம்.புவாட் ஆகியோர் பெற்றுக் கொள்வதையும். மேற்படி நிகழ்வில் நூலின் ஆய்வினை கவிஞர் கிண்ணியா அமீர் அலி வழங்குவதையும், நிகழ்வில் ஏனைய பிரதிகளை வருகை தந்த பிரமுகர்களும் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு அசிரியர்களும் வழங்கி கௌரவித்ததுடன் மாணவர்களின் ஹஸீதாக்களையும் படங்களில் காணலாம்.
மேற்படி நூலினை கல்லூரியின் ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவரான நஜாத் ஆசிரியர் தலைமையிலான குழுவினரால் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இம்முறை மேற்படி; பாடசாலையில் ஐந்தாம் ஆண்டுப் பரீட்சையில் சித்தியடைந்த 10 மாணவர்களும் விஷேடமாக கௌரவிக்கப்பட்டனர்.





Post a Comment