புதியவைகளையும், பழையவைகளையும் ஒன்றிணைப்பதே உலகின் நவீனத்திற்கு செல்லும் பாதையாகும்
புதியவைகளையும், பழையவைகளையும் ஒன்றிணைப்பதே உலகின் நவீனத்திற்கு செல்லும் பாதையாகும் இன்று புதியவைகளைப் போன்றே பழையவைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றை மக்களின் அனுகூலத்திற்காக பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டமாக ஏற்படுத்துவதானது நம் அனைவரினதும் கடமையும், பொறுப்புமாகும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்கள் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் அவர்கள் இதனை எஹெலியகொட வெல்ல எல்லாவல பஹலகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஏர்மங்கள நிகழ்வில் பங்குபற்றிய போது கூறியிருந்தார்.
இன்று நாம் வயலில் விதைப்பு செய்தோம். இவை அனைத்திலும் நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய புத்துணர்வுகள் உள்ளன. அவை யாதென நாம் எம்மிடையே கேட்டால் அது எமது உரிமைகளை மீண்டும் உயிர்பெறச்செய்து அதில் நாமும் பங்காளர்களாக மாறுகின்றோம் என்பதாகும். இது மிகவும் ஆச்சரியமானதாகும். இதற்கு காரணங்கள் கூறமுடியாமல் உள்ளது. இது எமது வாழ்க்கையுடன் இணைந்துள்ளது. இது எமது உரிமையாகும்.
நாம் அனைவரும் இதனை இலங்கையிலுள்ள சகலருடனும் இதனை அனுபவிக்க வேண்டும். என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இன்று நாம் இவ்விடத்தில் நடத்தியது விதைப்பு நிகழ்வொன்றை மாத்திரமல்ல பழையவைகளை புதுப்பித்து புதிய உலகின் சவால்களை வெற்றிக்கொள்ளும் செயற்பாட்டை ஆகும். புரதான நெறிகளை நாம் புதிய ஆராய்ச்சிகளின் ஊடாக மேம்படுத்துவதற்கும், பழைய விவசாய முறைகளை புதிய முறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னேற்றுவிப்பதற்கும் பசளைகளை விஞ்ஞான முறையில் மேற்கொண்டு பசளைகளை விநியோகிக்கும் வேலைத்திட்டமும் தற்போது இடம்பெற்று வருகின்றது.
புதிய முறைமைகள் செயற்படுத்துதல், புதியவைகளையும், பழையவைகளையும் ஒன்றிணைத்தலே நவீன உலகிற்கு செல்லும் பயணமாகும். பழையவற்றையும், புதியவற்றையும் ஒன்றிணைப்பதன் மூலம் எமது புராதானமானவைகளுக்கு இன்றும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அன்று நஞ்சுள்ள நெல்வகைகள் வேண்டாமென்று புறக்கணிக்கின்றனர். இராசாயன பசளை இன்றி விளைவிக்க முடியாத நெற்களால் உருவாக்கும் அரிசிக்கு இந்த உலகமானது போராட்டத்தை நடத்துகிறது. இன்று மீண்டும் உலகமானது கேட்பது இராசாயன பசளையிடப்படாத உணவுகளையே ஆகும். அதனை நோக்கிச்செல்லும் பயணத்திற்கே நாம் தீர்மாணித்துள்ளோம்.
நாம் மீண்டும் கடந்த காலத்தினை நோக்கிச் செல்லும்பயணமாகும். ஆகவே, இன்று நாம் இம்மகிழ்ச்சியை அனுபவிக்கும் வேளையில் இதற்கு தலைமை வழங்கிய சகலருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாம் இன்று பழைய நெல் வகைகளை புதிய முறைக்கேற்ப விதைக்கின்றோம். நாம் இன்று நஞ்சற்ற உணவு முறைக்கு ஏற்புடையவர்களாக உள்ளோம், அதேபோன்று தான் தமிழ் மக்கள் பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளிலும் நடைபெறுகிறது. அதேபோல் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையினர் வாழும் பகுதியிலும் எம்மைப்போன்று நெற்களை விதைக்கின்றனர். எம்மைப்போன்றே அவர்களுக்கும் கலாச்சாரம் உள்ளது. இன்று நாம் பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றி விளக்குகளை ஏற்றி வணங்கும் முறைமைகளை போன்று தமிழ், முஸ்லீம் மக்களும் தமது பிரதேசங்களில் அவர்களின் கலாச்சார முறைமைகளுக்கேற்ப மேற்கொள்கின்றனர்.
இலங்கைக்கேற்ப அம்முறைகளை முன்னெடுத்துச்செல்ல அரசானது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. ஆகவே, நச்சுத்தன்மையில்லாத விவசாயத்திலிருந்து உணவு பழக்கத்திற்கு ஏற்புடையவர்களான நாம் தமிழ், முஸ்லீம் சகோதர்களுடன் எமது நாட்டை உணவு உற்பத்தியாக்கும் தானிய களஞ்சியமாக உருவாக்கி உலகத்திற்கு நச்சற்ற உணவுகளை விநியோகிக்கும்அடிப்படை நிலையமாக உருவாக நாம் செயற்படுவோம். அதன் மூலம் இலங்கை உலகின் முன் கொண்டு செல்வோம். அதற்கு அவசியப்படும். இலங்கை பலத்தை ஒன்றிணைக்க இன்று அரசானது மேற்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு மீனவர்களும், தொழிலாளர்களும் கைகோர்த்து கொள்வது அவசியம் என அமைச்சர் அவர்கள் மேலும் கூறினார்.
சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மாகாணசபை உறுப்பினர்களான நமிந்த அனுர்பிரிய, சலித்த கருணாரத்ன ஆகியோரும் அப்பிரதேசத்திலுள்ள பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
மஹேந்திர ஹரிசந்திர
ஊடக செயலாளர்
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு

Post a Comment