முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க, பேதமின்றி செயற்பட வேண்டும் - என்.எம். அமீன்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்டத்தில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் தேர்தல் தொகுதி ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கிர் மாக்கார் குரல் கொடுத்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் கூறினார்.
முன்னாள் சபாநாயகர் எம்.ஏ. பாக்கிர் மாக்காரின் 16 வது நினைவு தினத்தை முன்னிட்டு பேருவளையில் நடைபெற்ற நினைவு தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மர்ஹும் பாக்கிர் மாக்கார் முஸ்லிம்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக பல பங்களிப்புச் செய்தார். துரதிஷ்டம் இன்று அவர் பிரதிநிதித்திய பேருவலைக்கோ, களுத்துறை மாவட்டத்துக்கோ முஸ்லிம் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்துள்ளது. முஸ்லிம்கள் எதிர்காலத்தில் தம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த கட்சி பேதங்களுக்காய் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய கால கட்டத்திலே நாம் வாழ்கிறேன்.
முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருக்க வேண்டுமென பாக்கிர் மாக்கார் குரல் கொடுத்தார் அதற்கு வழி சமைப்பதற்காக உதயம் மற்றும் டோன் என்ற பெயர்களில் இரு தமிழ் ஆங்கில பத்திரகைகளை முன்னின்று நடத்தினார். அவர் மறைந்து 16 வருடங்கள் கழிந்தும் முஸ்லிகளுக்காக குறைந்த பட்சம் ஒரு தினசரியைக் கூட ஆரம்பிக்க முடியாத நிலையில் எம் சமூகம் இருப்பது கவலையைத் தருகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்டத்தில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் தேர்தல் தொகுதி ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கிர் மாக்கார் குரல் கொடுத்தார் என்றார்.
கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஐ.தே.கவின் உப தலைவர் ஜோசப மைக்கல், உறுப்பினர் ஏ.எம். யூசுப் ஐ.தே.க பேருவலை உறுப்பினர் ஜமில் ஆகியோரும் இதில் உரையாற்றினர்.

Post a Comment