ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் 10-10-2013 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நடந்த கொலை சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மொனராகலை மாவட்டத்தின் எத்திமலை என்ற பிரதேசத்தில் இரண்டு பேரை இவர்கள் கொலை செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் சகோதரர்கள் சம்மந்தப்பட்டிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி கியான் எச். குலதுங்க, கொலையை அவர்களே செய்துள்ளதாக சாட்சியங்களும் சம்பவங்களும் உறுதிப்படுத்தியிருப்பதாக கூறினார்.
இதனால் இந்த கொலை குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.

Post a Comment