Header Ads



சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா தடுத்ததாம் - நோபல் பரிசுக்கு புடின் பெயர் பரிந்துரை

2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷ்ய அதிபர் பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட புகாரில், அமெரி்க்கா தாக்குல் நடத்த தயாரானது. இந்நிலையில் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா தடுத்து , பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தது. 

இதில் அரசியல் மற்றும் தூரதகம் வாயிலாக உரிய நடவடிக்கை எடுத்து பதட்டத்தை தணித்தார் ரஷ்யா அதிபர் விளாடிமிர்புடின் (56), இதனை பாராட்டி, உலக நாடுகளின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அகடாமி என்ற அமைப்பு, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு புடின் பெயரை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு கமிட்டிக்கு கடந்த செப்.16-ம் தேதி அனுப்பியதாகவும், அதனை பெற்றுக்கொண்டதாக செப்.20-ம் தேதி பதில் வந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது

No comments

Powered by Blogger.