மாட்டை பாதுகாப்பதற்காக சிறுத்தையுடன் போராடிய 65 வயதுடைய அப்துல் மஜீத்
(Inn) இந்தியா - கர்நாடக மாநிலம் பாபா புதான்கிரி மலைப்பகுதியில் அத்திஹுண்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 65) எனும் முதிய விவசாயி வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார்.
அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து தப்பி வந்த சிறுத்தையொன்று அப்துல்மஜீத் வீட்டின் பின்புறம் வந்து அங்குள்ள மாடுகளை இரையாக்க முயன்றது. மாடுகளின் அலறல் கேட்டு, வந்து பார்த்த அப்துல்மஜீத், சிறுத்தையை விரட்ட முயன்றார்.
அச்சமயம், எதிர்பாரா விதமாக சிறுத்தை அவர்மீது பாய்ந்தது. இதனால் அப்துல்மஜீத் காயமுற்றார். அதன் பின்னர் அக்கம்பக்கத்தவர்கள் திரளவும் சிறுத்தை தப்பியோடியது.
காயம்பட்ட விவசாயி அப்துல் மஜீத்துக்கு சிக்மக்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
.jpg)
Post a Comment