பாறைகள் உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
அமெரிக்காவில் சுற்றுலா சென்ற இடத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியாயினர். சிறுமி மட்டும் உயிர் தப்பினார்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் டானி ஜான்சன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். மேலும் பள்ளி ஒன்றில் பகுதி நேர நீச்சல் பயிற்சியாளராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி டாவ்னா, 13 வயது மகள் கிரேசி, மற்றொரு மகள் குளோவா ரெய்ன் மற்றும் 2 உறவினர்கள் ஆகியோர் விடுமுறையில் கொலாராடோ மாகாணத்தில் உள்ள புவனே விஸ்டா மலைப்பகுதிக்கு வந்தனர். நேற்று பகலில் அப்பகுதியில் இவர்கள் காரை நிறுத்தி விட்டு மலைப்பகுதியில் இளைப்பாறினர்.
அப்போது திடீரென பூகம்பம் வருவது போல் சத்தம் கேட்டது. மரங்கள் ஒடிந்து விழுவதை கண்ட டானி ஜான்சன் கூச்சலிட்டபடியே அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் என்று கூறியபடி தனது மகள் கிரேசியை உடனடியாக ஒரு மேடான இடத்திற்கு கொண்டு சென்றார். மற்றவர்களை மீட்பதற்காக சென்ற போது அதற்குள் ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்து அனைவரும் புதையுண்டு போயினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிரேசி, அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கதறி அழுதார்.
புதையுண்டவர்கள் உடல்களை மீட்கும் பணி நடப்பதாக நகர மேயர் ஜான் ஸ்பீஸ் தெரிவித்தார். -

Post a Comment