Header Ads



யாழ்ப்பாணம் மன்பஉல் உலூம் மதரசா பொதுமக்களிடம் கையளிப்பு (படங்கள்)


(பா.சிகான்)

23 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று காணப்பட்ட மன்ப உல் உலூம் மதரசா எனும் மத்ரஸா நேற்று மாலை இஷா தொழுகையின் பின்னர் பூரணமாக புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக மதரஸா அபிவிருத்தி சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி மத்ரஸா ஏற்கனவே புனரமைக்கப்பட முன்னர் முகீதின் ஜீம்மா பள்ளிவாசலின் பராமரிப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.

தற்போது பூரணமாக புனரமைக்கப்பட்டு நேற்று (14.10.2013) வைபவ ரீதியாக பள்ளிவாசல் நிர்வாக பொருளாளர் எம்.எஸ்.எஸ் சாகுல் ஹமீட்டினால் சங்க உறுப்பினர் எம். ஜமாலிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் ஐயூப், ஜம்மியத்துல் உலமா யாழ் மாவட்ட தலைவர் மௌலவி எம்.ஏ அஸீஸ்,செயலாளர் மௌலவி எம்.ரொஸான், முஹம்மதியா பள்ளிவாசல் பெஷ் இமாம் மஹ்மூத் பலாகி, பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் எம்.தாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.