'டிக்கட்' இன்றி பயணித்தவர்களிடமிருந்து, 6 மாதங்களில் 1.3 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவீடு
அரச பொது போக்குவரத்து பஸ்ஸில் 'டிக்கட்' இன்றி பயணித்த பயணிகளிடருந்து இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.3 மில்லியன் ரூபா தண்டப் பணமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையான ஆறு மாத காலப் பகுதியில் இ.போ.ச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது உரிய பயணத்துக்கான பட்டுச்சீட்டைப் பெறாது இ.போ.ச பஸ்களில் பயணம் செய்த 4 ஆயிரத்து 138 பயணிகளிடமிருந்து இத்தொகைத் தண்டப் பணம் பெறப்பட்டுள்ளது.
இ.போ.சபையின் விஷேட பரிசோதனைக் குழுவினால் ஆறு மாதங்களில் 98ஆயிரத்து 457 சோனை நடவடிக்கைகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சோதனை நடவடிக்கையின்போது பெரியளவில் 'டிக்கட்' மோசடி செய்த 915 பயணிகளும் சிறியளவில் மோசடியில் ஈடுபட்ட 2,700 பயணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன,; இச்சோதனை நடவடிக்கையின் போது குற்றமிழைத்தாகக் கருதப்படும் நடத்துதுனர்கள் தொடர்பான குற்றங்கள் ஊர்ஜீதப்படுத்தப்படுமிடத்து அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் தவறிழைத்துள்ள ஒரு சில சாரதிகளுக்கெதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இ.பே.ச. பொது போக்குவரத்து சேவையில் இடம் பெறும் மோசடிகளைத் தடுக்ககும் பொருட்டு நடமாடும் பரிசோதகர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகிறார்.
இதேவேளை, ரயில் பயணங்களின் போது டிக்கட் பெறாத மற்றும் வகுப்பு மாறி பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகளிடமிருந்து விஷேட சோதனை குழுவினரினால் கடந்த காலங்களில் பெருமளவு தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment