அட்டாளைச்சேனையில் 2013 ஆண்டுக்கான நீர்ப்பாசன வாரம்

(ஏ.எல்.ஜனூவர்)
அட்டாளைச்சேனையில் 2013 ஆண்டுக்கான நீர்ப்பாசன வாரம் நிகழ்வினை மத்திய நீர்ப்பாசன திணைக்களமும், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்திற்கு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன வாரம் தொடர்பான உயர்மட்டக் கூட்டமொன்று இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இன்று இடம் பெற்றது.
அட்டாளைச்சேனையில் இடம் பெறவுள்ள நீர்ப்பாசன வாரத்தினை முன்னிட்டு எதிர்வரும் 21ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகளுக்கு மிகவும் முக்கியத்துவமான வள்ளக்குண்டு வடிச்சல் திட்டம், மீனோடைக்கட்டிலிருந்து கோணாவத்தை பெரிய பாலத்தடி வரையிலான வடிச்சல் திட்டம் போன்ற நீர்ப்பாசன திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், மீனோடைக்கட்டிலிருந்து கோணாவத்தை ஆற்றுக்கான எல்லைக்கற்கள் இடுதல் பணிகளும் இத்தினத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.திலகராஜா, அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாரை நீர்ப்பாசன பணிப்பாளர் சமன் வீரசிங்க, உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment