அம்பாறை மக்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு அனர்த்தம்
(யு.எல்.எம்.றியாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் வருகையும் அதன் அட்டகாசங்களும் நாலூக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதனால் பல கிராமங்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதன்காரணமாக பெரும்பாலான கிராமங்களில் இரவு வேளைகளில் நிம்மதியின்றி, தூக்கமின்றி விழித்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இன்று மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளால் வெகுவாக பாதிக்கப்பட்டு தற்போது நிம்மதியாக தமது வாழ்கையை களித்துவந்த மக்களுக்கு பயங்கரவாத செயற்பாட்டையும் விட மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் தமது வாழ்நாட்களை கழிக்க வேண்டிய நிலைக்கு இன்று அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது காட்டு யானைகள் நகரங்களையும் நோக்கி படையெடுக்கின்ர நிலைக்கு இம்மாவட்டம் காணப்படுகின்றது, அதுமட்டுமல்லாது அம்பாறை கல்முனை பிரதான வீதிகளிலும் இரவு வேளைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது இதனால் சாதரணாமாக இரவு வேளைகளில் இவ்வீதியால் போக்குவரத்து செய்வதற்கு மக்கள் அச்சப்பட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக மாவடிப்பள்ளி தாம்போதிக்கு அருகாமையில் யானைக்
கூட்டம் இரவு வேளைகளில் பிரதான வீதியை ஊடறுத்துச் செல்வதுடன் வீதி ஓரங்களிலும் நிற்பதை காணக்கூடியதாக இருக்கின்றது ஆகவே இவ்வீதியால்
இரவில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
காட்டு யானைகளின் படையெடுப்பை கண்டும் காணதவர்கள் போல் எது வித
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருக்கும் சம்மந்தப் பட்ட அதிகாரிகள்,மக்கள் பிரதிநிதிகள் போன்றோரின் தற்கால அசமந்தப்போக்கானது அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் இன்னுமொரு அனர்த்தமே. பருவம் அறிந்து பயிர் செய்யுங்கள் ?


அப்போ புலி பயங்கரவாதம் , இப்போ யானை பயங்கரவாதம், எங்குட பாதுகாப்பு செயலாளர் என்ன பாத்துக்கொண்டு சும்மா இருந்தால் மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியா ஆய்டுமே, அதனால முள்ளிவாய்க்கால் பாணியில ஒரு அடியடித்து இந்த யானை பயங்கரவாதிகளை விரட்டகூடாதா?
ReplyDeleteஇது ஒருவகை எதிர்ர்காலத்திட்டம். புரிந்தவர்களுக்கு புரியும் .இதுவும் ஒரு வகை குடியேற்றத்திட்டம்.
ReplyDelete